பப்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பப்ஜி (பிளேயர்அன்னவுன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ்)
படிமம்:A Player Playing PUBG Mobile.jpg
பப்ஜி மொபைல்

ஆக்குனர் பப்ஜி நிறுவனம்
வெளியீட்டாளர்
இயக்குனர்
  • பிரண்டன் கிரீன்
  • டே- சொக் ஜங்
தயாரிப்பாளர் சங்-ஹன் கிம்
வடிவமைப்பாளர் பிரண்டன் கிரீன்
ஓவியர் டே-சொக் ஜங்
இசையமைப்பாளர் டாம் சல்டா
ஆட்டப் பொறி அன்ரியல் எஞ்சின்4
கணிமை தளங்கள்
வெளியான தேதி
பாணி பேட்டில் ராயல்
வகை பல நபர் விளையாடும் விளையாட்டு


பப்ஜி (PUBG) (பிளேயர்அன்னவுன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ், PlayerUnknown's Battlegrounds) என்பது பல நபர்கள் இணைந்து, இணையதளத்தில் விளையாடும் ஓர் இணையதள விளையாட்டு ஆகும். இது தென்கொரியாவினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிகழ்பட விளையாட்டு நிறுவனமான புளூஹோலின் கிளை நிறுவனமான பப்ஜி நிறுவனத்தால் உருவாக்கி மேம்படுத்தப்பட்டது ஆகும். இந்த விளையாட்டு 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் எனும் சப்பானியத் திரைப்படத்தினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிரீன் என்பவரின் வழிகாட்டுதலின் படி சில மாற்றங்களை (தனி நபர் விளையாட்டு) இந்த விளையாட்டில் செய்துள்ளனர். இந்த விளையாட்டில் நூறு வீரர்கள் வான்குடை மூலம் தனித் தீவில் இருப்பது போலவும், அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களைக் கொலை செய்வதைப்போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க பாதுகாப்பான இடங்களின் அளவானது குறைந்துகொண்டே செல்லும். இறுதியாக இருக்கும் நபர் அல்லது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

விளையாடும் முறை[தொகு]

இவ்வகையான விளையாட்டானது பல நபர்கள் ஒரே சமயத்தில் விளையாடும் பேட்டில் கிரவுண்ட் எனப்படும் சுடுதல் விளையாட்டு வகையைச் சார்ந்தது ஆகும். இதில் அதிகபட்சமாக நூறு நபர்கள் ஒரே சமயத்தில் விளையாட இயலும். இதில் விளையாடத் துவங்கும் முன் ஒரு வீரர் தான் தனியா விளையாட வேண்டுமா அல்லது இருவரா அல்லது குழுவாக விளையாட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க இயலும். இந்தக் குழுவில் அதிக பட்சமாக நான்கு நபர்கள் விளையாடலாம். இறுதியாக இருக்கும் நபர் அல்லது அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.[1]

இந்தியாவில் தடை[தொகு]

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, 02 செப்டம்பர் 2020 அன்று பப்ஜி மற்றும் சீன செயலிகள் உள்பட மொத்தம் 118 செயலிகள் தடை செய்யப்படுவதாக, இந்திய அரசு தெரிவித்தது. இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக, இந்திய அரசு தெரிவித்தது.[2][3]

சான்றுகள்[தொகு]

  1. Carter, Chris (June 9, 2017). "Understanding Playerunknown's Battlegrounds". Polygon. June 9, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 9, 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  2. "பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!".
  3. "இந்தியாவில் பப்ஜி உள்பட மேலும் 118 செயலிகளுக்குத் தடை!". தினமணி (02 செப்டம்பர், 2020)

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பப்ஜி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்ஜி&oldid=3194632" இருந்து மீள்விக்கப்பட்டது