பன்னிப்பிட்டிய மேம்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னிப்பிட்டிய மேம்பாலம் இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பன்னிப்பிட்டிய பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது. 12 சனவரி, 2010 அன்று இலங்கை அரச அதிபர் மகிந்த இராசபக்சவினால் இந்த மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டது[1]. 420 மீற்றர் நீளமான இந்த மேம்பாலம் 165 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதாக இலங்கை நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்தது[2].

இந்தப் பாலம் இலங்கையின் ஏழாவது மேம்பாலம் என்று அறிவிக்கப்படுகின்றது[3].


உசாத்துணைகள்[தொகு]

  1. "அரச அறிவிப்பு". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
  2. PRESIDENT OPENS PANNIPITIYA FLYOVER
  3. "அரச அறிவிப்பு". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.