பன்னாட்டு மண் ஆண்டு
பன்னாட்டு மண் ஆண்டு (2015) | |
---|---|
நிகழ்நிலை | Active |
வகை | கண்காட்சிகள் |
வலைத்தளம் | |
http://www.fao.org |
பன்னாட்டு மண் ஆண்டு, 2015 (International Year of Soils, 2015) என்பது உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரச் செய்யும் வகையிலும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2015ஆம் ஆண்டை சர்வதேச மண் ஆண்டாக ஐநா பொதுச் சபை 2013 டிசம்பர் 20 இல் இடம்பெற்ற தனது 66ஆவது அமர்வில் அறிவித்தது. ஐ.நா. சபையின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக நாடுகளில் இந்த ஆண்டு முழுவதும் செயற்படுத்த பல செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.[1]
வரும் தலைமுறையினர்க்கு மண்ணின் முக்கியத்துவத்தை அறியச் செய்வது நமது தலையாய கடமை. நம் நாடு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு, கிராமங்கள் நிறைந்த நாடு என்று கூறினாலும் வளர்ந்து வரும் தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பம் நம்மை நமது மண்ணோடு நம் முன்னோர்கள் கொண்டிருந்த உறவை முழுவதுமாக அறுக்கும் வேலையையே செய்து வந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Draft resolution submitted by the Vice-Chair of the Committee, Ms. Farrah Brown (Jamaica), on the basis of informal consultations on draft resolution A/C.2/68/L.21" (PDF). United Nations General Assembly. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.