பன்னாட்டு ஒளி ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு ஒளி ஆண்டு (2015)
நிகழ்நிலைActive
வகைகண்காட்சிகள்
தொடக்கம்19-20 சனவரி 2015
வலைத்தளம்
light2015.org

ஒளிக்கும் ஒளித் தொழிநுட்பங்களுக்குமான சர்வதேச ஆண்டு, 2015 (International Year of Light and Light-based Technologies, 2015) என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். ஒளியையும், ஒளியின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பங்களையும் போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒளி சார்ந்த தொழில் நுட்பங்களைப் பரவலாக்க அமைந்த வாய்ப்பாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஒளியின் பண்புகளைப் பற்றிய புரிதல்களுக்கு அடித்தளமிட்ட பல நிகழ்வுகளின் நிறைவு ஆண்டாக 2015 அமைந்துள்ளதால், இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

பன்னாட்டு ஒளி ஆண்டு 2015 இல் ஆரம்ப நிகழ்வுகள் பாரிசு நகரில் 2015 சனவரி 19-20 ஆகிய நாட்களில் இடம்பெற்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_ஒளி_ஆண்டு&oldid=3388309" இலிருந்து மீள்விக்கப்பட்டது