உள்ளடக்கத்துக்குச் செல்

பனிரா கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிரா கிரி
Banira Giri
கவிஞர் பனிரா கிரி
தாய்மொழியில் பெயர்वानीरागिरि
பிறப்பு(1946-04-11)11 ஏப்ரல் 1946
குர்சியோங்கு, டார்ச்சிலிங்கு, இந்தியா
இறப்பு24 மே 2021(2021-05-24) (அகவை 75)
உள்ளூர் மருத்துவமணை, காட்மாண்டு
கல்விமுனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்திரிபுவன் பல்கலைக்கழகம், முனைவர்.
பணிகவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
 • சப்ததித் சாந்தனு
 • கரகர்
வாழ்க்கைத்
துணை
சங்கர் கிரி
பிள்ளைகள்2
விருதுகள்சாச்கா புரசுகார்

பனிரா கிரி (BaniraGiri) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார்.11 ஏப்ரல் 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கரகர், மேரோ அவிசுகர் என்ற கவிதைத் தொகுப்பு, சப்ததித் சாந்தனு போன்ற பல படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.[1][2][3][4]தனது கவிதைத் தொகுப்பான சப்ததித் சாந்தனுவுக்கு மதிப்புமிக்க சாச்கா புரசுகார் விருதைப் பெற்றார். இப்பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

கோபால் பிரசாத் ரிமாலின் கவிதைகள் குறித்த ஆய்வறிக்கைக்காக திரிபுவன் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பும் பனிரா கிரிக்கு உள்ளது.[5]

மே 24, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதியன்று இரவு பனிரா கிரி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனது 75 ஆவது வயதில் இறந்தார். கோவிட்-19 நோயறி சோதனையில் பனிராவுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.[6]

படைப்புகள்

[தொகு]
 • கரகர்
 • அவிசுகர் குரூப்பர்
 • சப்ததித் சாந்தனு
 • பர்பத்கோ அர்கோ நாம் பர்பதி
 • ரோகினேலே ஆகர் தினா சக்டைனா

மேற்கோள்கள்

[தொகு]
 1. "BaniraGiri - Nepali poet: The South Asian Literary Recordings Project (Library of Congress New Delhi Office)". Loc.gov. 1946-04-11. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
 2. Part-Time & Freelance Jobs (2013-01-30). "Poetess Dr.BaniraGiri". Boss Nepal. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
 3. "BaniraGiri (poet) - Nepal - Poetry International". Poetryinternationalweb.net. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
 4. "The Drunken Boat". The Drunken Boat. பார்க்கப்பட்ட நாள் 2014-04-12.
 5. "BaniraGiri (b. 1946)". Himalayan Voices. 1991. பார்க்கப்பட்ட நாள் 2014-07-11.
 6. Veteran poet BaniraGiri passes away

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிரா_கிரி&oldid=3503549" இலிருந்து மீள்விக்கப்பட்டது