பனிப் படிவுகள்
பனி படிவுகள் என்பது பனியாறு நகரும் போது அதனடியில் உள்ள பாறை சிதைந்து மண்ணும் கல்லும் பெயர்ந்து அரிக்கப்பட்டு உருவாகும் ஒன்றாகும்.[1] அனைத்து பாறை பொருட்களையும் பனியாறுப் பொதி என்பர். மேல்பரப்பில் சுமந்து வரப்படும் பனியாற்றின் உடலுக்குள் பொதிந்தவாறு வருவது உள்பொதி என்றும் அடிப்பகுதியில் கடத்தபடுவது அடிப்பொதி என்றும் அறியப்படுகிறது.[2] மேலும் பக்கப்பொதியும், நடுப்பொதியும் கடைப்பொதிகளும் உள்ளன. பனியாற்றின் உருகுநீர் பெருமளவு பாறைப் பொருட்களை கடத்திச் செல்கிறது. பாறை மாவு முதல் பாறாங்கற்கள் வரை இவ்வாறு படிகிறது. இவற்றை பனியாற்றுப் படிவுகள் என்பர். பள்ளத்தாக்கின் குறுக்கே ஒரு நீள் குன்றைப் போல காட்சியுடைய பனிக்களிப்பொதியை கடைப்பொறி என்பர்.
பனியாற்றுபடிவுகள் 2 வகைப்படும்.
- பனிகளிப் பொதி
- பனி அடுக்குப்படி
பனியாறு திறந்த சமவெளிகளில் கூட்டங்கூட்டமாகக் காணப்படுகின்றன. இது கவிழ்த்து வைக்கத்துள்ள தேக்கரண்டி போன்ற எத்திசை நோக்கிக்சென்றது என்பதை காட்டுகிறது. குவிந்த பக்கத்திலிருந்து மெலிந்த முனைப்பக்கத்தை நோக்கி பணியாறு நகர்ந்துள்ளது. ஆழம் அதிகம்மின்றி, மேற்புறம் சீரமைப்பின்றி உள்ள மிகப்பெரிய பரப்பளவுடைய பனிகளிப் பொதிக்கு தரைப்பொதி என்று பெயர்.