பத்தம் பால் ரெட்டி
தோற்றம்
பத்தம் பால் ரெட்டி Baddam Bal Reddy | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 1985–2019 | |
| தொகுதி | கர்வான் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பத்தம் பால் ரெட்டி (Baddam Bal Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தெலுங்கானா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1985, 1989 மற்றும் 1994 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர் தெலுங்கானா சட்டமன்றத்தின் கர்வான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2004 ஆம் ஆண்டில் இசுலாமிய தீவிரவாத இயக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களால் பத்தம் பால் ரெட்டி படுகொலை முயற்சிக்கு இலக்கானார். சதிகாரர்களில் ஒருவரான சையத் இயாகிர் ரகீம் 2017 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் முக்கிய குற்றவாளியான பர்கத்து உல்லா கோரி தப்பியோடினார்.[3]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| கால்ம் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1985-89 | பத்தம் பால் ரெட்டி | பாரதிய சனதா கட்சி | |
| 1989-94 | பத்தம் பால் ரெட்டி | பாரதிய சனதா கட்சி | |
| 1994-99 | பத்தம் பால் ரெட்டி | பாரதிய சனதா கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP, MIM to lock horns in three constituencies". The Hindu. Retrieved 2018-01-29.
- ↑ "My track record will help me: Bal Reddy". Times of India. 2003-07-09. Retrieved 2018-01-29.
- ↑ "Hyderabad: Man in BJP leader murder plan held". Deccanchronicle.com. 21 January 2017. Retrieved 2018-01-29.