பத்தமேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பத்தமேனி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பகுதியில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில் அடங்கியுள்ள ஒரு ஊர். இவ்வூர் ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதியை அண்டி, அச்சுவேலிச் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் கிழக்குப் புறமாக வலிகாமத்தையும், வடமராட்சியையும் பிரிக்கும் தொண்டைமானாறு நீரேரி உள்ளது. இந்த ஊரை மட்டுமே உள்ளடக்கியுள்ள பத்தமேனி கிராம அலுவலர் பிரிவின் மொத்தப் பரப்பளவு 2.75 சதுர கிலோமீட்டர். இதில் நிலப்பரப்பு 2.55 சதுர கிலோமீட்டர். அச்சுவேலி, இடைக்காடு, ஒட்டகப்புலம், நவக்கிரி, தம்பாலை, கதிரிப்பாய் போன்றவை பத்தமேனியில் அயலூர்களாக உள்ளன.

2012ம் ஆண்டு மதிப்பீட்டின்படி 100% தமிழர்களே வாழுகின்ற இவ்வூரின் மக்கள்தொகை 2243. இதில் ஆண்கள் 1123, பெண்கள் 1120. இதில் 331 பேர் இடம்பெயர்ந்த மக்கள் ஆவர்.[1]

பாடசாலை[தொகு]

பத்தமேனியில் இரத்தினேஸ்வரி வித்தியாலயம் என்னும் ஒரு பாடசாலை இயங்கிவருகிறது.

கோயில்கள்[தொகு]

பத்தமேனியில் உள்ள கோயில்களுட் சில:

  • பத்தமேனி பிள்ளையார் கோயில்
  • பத்தமேனி இலகடிப்பதி முருகன் கோயில்
  • பத்தமேனி வடபத்திரகாளி கோயில்
  • பத்தமேனி ஞானவைரவர் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தமேனி&oldid=2400833" இருந்து மீள்விக்கப்பட்டது