பதி வைத்தல்
Jump to navigation
Jump to search
தாய்த் தாவரத்துடன் இணைந்திருக்கும் போதே அதன் ஒரு பகுதியில் வேர்கொள்ளச் செய்து அதனை புதிய தாவரமாகப் பிறப்பாக்கம் செய்தல் பதி வைத்தல்(Layering) எனப்படும். பதி வைத்தல் பொதுவாக தோட்டப் பயிராக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பதியமுறை இனப்பெருக்கமாகும். இது இரு வகைப்படும்.
- காற்றுப் பதி
- நிலங்கீழ்ப் பதி
காற்றுப் பதி[தொகு]
நிலத்தின் கீழ் வளைத்தெடுக்க முடியாத தாவரத் தண்டுகளில் அப்படியே வேர்கொள்ள வசதியாக மேற்பரப்புக் காயங்களை ஏற்படுத்தி அதில் போசனை ஊடகங்களைக் கொண்டு வேர்கொள்ளத் தூண்டப்படும்.
நிலங்கீழ்ப் பதி[தொகு]
இலகுவில் வளையக் கூடிய நிலத்திற்கு அண்மையிலான கிளைகளில் நிலங்கீழ்ப்பதி மேற்கொள்ளப்படும்.