பதாகம்
பதாகம் (Pathakam) என்பது பரதநாட்டியத்தின் உருப்படிகளில் ஒன்றான ஒற்றைக்கை முத்திரைகளில்(அஸம்யுத ஹஸ்தம்) ஒன்றாகும். இது கொடி எனும் கருத்தைக் குறிக்கிறது.[1] இது பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடிக்கும் போது உருவாகிறது.
பதாக விநியோகங்கள்
[தொகு]பதாகத்தில் நாற்பத்தியொரு விநியோகங்கள் உள்ளன. பதாக விநியோகங்களின் ஸ்லோகம் மற்றும் கருத்து கீழே தரப்பட்டுள்ளன.
ஸ்லோகம்:-
நாட்டியாரம்பே வாரிவாகே வனே வஸ்துநிசெதனே/
குஜஸ்தனே நிசாயாம்ச நத்யாம் அமரமண்டனே//
துரங்கே கண்டனே வாயவ் சயனே/
கமநோத்யமே பிரசாபேச்ச பிரசாதேச்ச சந்த்ரிகாயாம்//
கனாத்தபே கபாட்டபாட்டனே சப்தவிபக்ஜர்த்தே தரங்ககே வீதிப்ப்ரவேசபாவேபி/
சமத்வேச்ச அங்கராதகே ஆர்த்மாத்தே சபதேசாபி//
துஸ்நிபாவநிதர்சனே தாளபத்ரெச்ச கேடேச்ச த்ரவ்யாதிர்ப்பர்சநேத்ததா/
ஆசீர்வாதக்ரியாயாம் நிருபச்டச்தேச்ஜபாவனே தத்ரதத்றேசிவசனே சிந்த்வ்து//
சுக்ருதிக்ரமே சம்போதனே ப்ரோகேபி கட்கரூபஷ்யதாரானே/
மாசே சம்பத்சரே வர்சதினே சம்மார்த்தநேத்ததா//
| ஸ்லோகம் | கருத்து |
|---|---|
| நாட்டியாரம்பே | நடனத்தின் ஆரம்பம். |
| வாரிவாகே | மேகம். |
| வனே | வனம். |
| வஸ்துநிசெதனே | பொருட்களை வேண்டாம் எனக்கூறல். |
| குஜஸ்தனே | மார்பு. |
| நிசாயாம்ச | இரவு. |
| நத்யாம் | நதி. |
| அமரமண்டனே | தேவலோகம். |
| துரங்கே | குதிரை. |
| கண்டனே | வெட்டுதல். |
| வாயவ் | காற்று. |
| சயனே | நித்திரை செய்தல். |
| கமநோத்யமே | முன் செல்லல். |
| பிரசாபேச்ச | புகழ்தல். |
| பிரசாதேச்ச | அனுகூலம். |
| சந்த்ரிகாயாம் | நிலவொளி. |
| கனாத்தபே | வெப்பம்., கடும் சூரிய ஒளி. |
| கபாட்டபாட்டனே | கதவை மூடித்திறத்தல். |
| சப்தவிபக்ஜர்த்தே | வேற்றுமை உறுப்பு. |
| தரங்ககே | சிறு அலைகள். |
| வீதிப்ப்ரவேசபாவேபி | வீதியில் பிரவேசித்தல். |
| சமத்வேச்ச | சமத்துவம். |
| அங்கராதகே | உடலின் அங்கங்களை தொடுதல். |
| ஆர்த்மாத்தே | தன்னைக் குறித்தல். |
| சபதேசாபி | சபதம் |
| துஸ்நிபாவநிதர்சனே | அமைதி |
| தாளபத்ரெச்ச | பனை ஓலையில் எழுதுதல். |
| கேடேச்ச | கேடயம். |
| த்ரவ்யாதிர்ப்பர்சநேத்ததா | பொருட்களை தொடுதல். |
| ஆசீர்வாதக்ரியாயாம் | ஆசீர்வதித்தல். |
| நிருபச்டச்தேச்ஜபாவனே | அரசனைப்போல் பாவனை செய்தல். |
| தத்ரதத்றேசிவசனே | இங்கு அங்கு எனல். |
| சிந்த்வ்து | கடல் அலைகள். |
| சுக்ருதிக்ரமே | நல்ல செயல். |
| சம்போதனே | ஒருவரை விழித்தல். |
| ப்ரோகேபி | முன்னோகிச்செல்லல். |
| கட்கரூபஷ்யதாரானே | வாளும் கேடயமும் ஏந்தல். |
| மாசே | மாசம். |
| சம்பத்சரே | வருடம். |
| வர்சதினே | மழைநாள். |
| சம்மார்த்தநேத்ததா | நிலத்தைத் துப்பரவாக்கல். |