பதம் (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதம் முழுவதும் அபிநயமாக அமையும் உருப்படி.[1] இது பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. இது காதல் சுவையை உணர்த்தும் உருப்படி ஆதலால் தலைவன் தலைவி உறவு முறையில் இறைவன் தலைவன். நாட்டியமாடுபவள் தலைவி. இது பரமாத்மா ஆகிய இறைவனை அடைய விரும்பும் ஜீவாத்மாவின் உறவை உணர்த்தும். இந்த உயர்ந்த உறவு, உலகியல் நிலையில் பதத்தில் சித்தரிக்கப்படுகிறது. தலைவி அனுபவிக்கும் பல்வேறு அந்தரங்க உணர்வுகள் இந்த உருப்படியில் அபிநயிக்கப்படும். பிரிவுத் துன்பம், புணர்ச்சி இன்பம், ஆற்றாமை முதலிய அக உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவது சிறப்பாகும். தாள வேறுபாடுகள் முக்கியத்துவம் பெறுவதில்லை. வெவ்வேறு வகையினரான தலைவியரின் தன்மைக்கு ஏற்ப அபிநயபாவகம் இருக்கும்.முருகன், சிவன், கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் இந்த உருப்படியில் தலைவனாகக் கொள்ளப்படுவர். மன்னர், வள்ளல் ஆகியோரைத் தலைவனாகக் கொண்ட பதங்களும் உள்ளன. பதங்களை தெலுங்கில் பாடியவர் சேத்ரக்ஞர் (கி.பி. பதினேழாம் நூற்றாண்டு).

இயற்றியவர்கள்[தொகு]

  • சேத்ரக்ஞர்
  • சீர்காழி முத்துத்தாண்டவர்

மேற்கோள்[தொகு]

  1. பதம், தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதம்_(பரதநாட்டியம்)&oldid=1907076" இருந்து மீள்விக்கப்பட்டது