பண்டைய இந்திய வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய இந்திய வரலாறு (நூல்) பண்டைய இந்திய வரலாறு: இந்நூல் இந்தியாவின் பண்டையகால வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது. இந்நூல் ஆங்கிலத்தில் ராம் சரண் சர்மாவால் எழுதப்பட்டது.

[நூலின் அமைப்பு:][தொகு]

இந்நூல் முதன்முதலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தால் 1977-இல் வெளியிடப்பட்டது. பின்னர் இதனை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் (OUP) புதுடில்லியில் 2005-இல் புதுபதிப்பாக வெளியிட்டது. இந்தப் புத்தகம் 387 பக்கங்களைக் கொண்டுள்ளது.

[உள்ளடக்கம்:][தொகு]

இந்நூலில் மொத்தம் 33 உட்பிரிவுகள் உள்ளன. இதன் முதல் அத்யாயம்: பண்டைய இந்திய வரலாற்றின் முக்கியத்துவம். இந்தியாவின் தொன்மைக்கால வரலாற்றைப் பற்றி ஏன் அறியவேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது. இதன் இறுதி அத்யாயம் பண்டைய இந்தியாவின் கொடைகளை நமக்கு காட்டுகிறது.

[விமர்சனம்:][தொகு]

இந்த புத்தகம் மத்திய கல்வி வாரியத்தின் புத்தகமாக இருந்தபோதே இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது. ஒவ்வொரு அத்யாயத்தின் இறுதியிலும் கால வரிசை கொடுத்திருப்பது மிகவும் அருமை. ஆசிரியரின் மொழிநடை தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளது. குறிப்பாக, இந்நூல் போட்டித்தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

[குறிப்பு:][தொகு]

இந்நூல் தமிழில் நியூ சென்சுரி புக் ஹௌஸ் பதிப்பகத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

[வகைப்பாடு:][தொகு]

இந்திய வரலாறு, பண்டைய இந்திய வரலாறு மற்றும் ராம் சரண் சர்மா புத்தகங்கள்.