பணிச் செயலாக்க மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பணி செயலாக்க மேலாண்மை (Business Process Management)என்பது ஒரு பணியை தொடச்சியாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் செய்யப் பயன்படுத்தப்படும் ஒர் அணுகுமுறையாகும். இது ஒரு பணியை அதன் தன்மையையும், அவசரத்தையும் பொறுத்து பொருத்தமானவர்களுக்கு பிரித்தளிப்பதன் மூலம் அப்பணியை விரைவாக முடிக்க உதவுகின்றதோடு மட்டுமல்லாமல் அப்பணியை செய்பவரையும் மேற்பார்வையிட அல்லது கண்காணிக்க உதவுகின்றது. பணி செயலாக்க மேலாண்மை வாழ்க்கை சுழற்சியை பின்வருமாறு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • 1.திட்டமிடல்
  • 2.மாதிரி அமைத்தல்
  • 3.செயல்படுத்தல்
  • 4.மேற்பார்வையிடல் அல்லது கண்காணித்தல்
  • 5.மேம்படுத்தல்

இந்த அணுகுமுறை எல்லாத்துறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் குறிப்பாக வங்கி, காப்பிடு, தொலைத்தொடர்பு போன்ற சேவைத்துறைகளில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.