பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
நூலாசிரியர் | ராபர்ட் கியோசாகி ஷரோன் லேச்ட்டர் |
---|---|
உண்மையான தலைப்பு | Rich Dad Poor Dad |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
தொடர் | ரிச் டேட் தொடர் |
வகை | நாவல் |
வெளியீட்டாளர் | Warner Books Ed |
வெளியிடப்பட்ட நாள் | ஏப்ரல் 1, 2001 |
ஊடக வகை | Hardback and paperback |
பக்கங்கள் | 207 |
ISBN | 0-446-67745-0 |
OCLC | 43946801 |
332.024 22 | |
LC வகை | HG179 .K565 2000 |
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (ரிச் டேட் புவர் டேட், Rich Dad Poor Dad) ராபர்ட் கியோசாகி மற்றும் ஷரோன் லேச்ட்டர் இணைந்து எழுதிய ஒரு சுய உதவி நிதி நூல். இந்தப் புத்தகம் முதலீடு, நிலைச்சொத்து (ரியல் எஸ்டேட்), சொந்தமாக தொழில் செய்தல் மற்றும் நிதி பாதுகாப்பு உத்திகள் மூலம் ஒருவர் நிதி சுதந்திரம் அடைவது பற்றி விளக்குகிறது. இந்தப் புத்தகம் தற்போது தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தால் பணம் புரிந்தவன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சுருக்கம்
[தொகு]கியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
புத்தகத்தில் காணப்படும் தலைப்புகளில் சில வருமாறு:
- நிதி பற்றிய அறிவின் பெறுமதி
- நிறுவனங்கள் செலவழித்ததன் பின்னரே வரிகளை செலுத்துகின்றனர், அதேவேளை தனிநபர்கள் முதலில் கட்டாயம் வரியைச் செலுத்த வேண்டும்.
- நிறுவனங்கள் எனப்படுபவை, அனைவரும் பயன்படுத்தக்கூடிய செயற்கையான அமைப்புகள், ஆனாலும் ஏழைகள் அதை எப்படி பயன்படுத்தலாம் என தெரியாதவர்கள்.
கியோசாகி மற்றும் லேச்ட்டர் ஆகியோரின் கருத்துக்களின் படி, உங்கள் சொத்துகளிலிருந்து வருமானம் எத்தனை நாள்களுக்கு உங்கள் வாழ்வாதாரமாக இருக்க முடியுமென்பதைக் கொண்டே உங்கள் செல்வம் அளவிடப்படும் என்பதாகும். உங்களின் மாதாந்த வருமானம், உங்களின் மாதாந்த செலவை மிஞ்சுகின்ற போதே, செல்வம் அளவிடப்படுவது எனப்படுவது, நிதி நிலைமைகளில் நீங்கள் தன்னிறைவு அடைதல் சாத்தியமாகும். இந்த நூலில் வருகின்ற கதாபாத்திரங்களான இரு தந்தைகளும் தங்கள் மகன்களுக்கு இந்த விடயங்களை கற்பிக்க வெவ்வேறான வழிமுறைகளைக் கையாண்டனர்.