பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு (Scheduled Castes Federation) இந்தியாவில் பட்டியல் சாதியினர் நலனுக்காகப் போராட அம்பேத்கர் தொடங்கிய ஒரு அமைப்பு. பின்னாளில் அரசியல் கட்சியாகவும் மாறி தேர்தல்களில் போட்டியிட்டது. சுயேட்சை தொழிலாளர் அமைப்பு (Independent labour organisation) என்ற பெயரில் தான் நடத்தி வந்த அமைப்பினை 1942ல் பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார் அம்பேத்கர். 1951 பொதுத் தேர்தலில் இவ்வமைப்பு முதன் முதலில் போட்டியிட்டது. பின்னர் இந்தியக் குடியரசுக் கட்சியாக வடிவமெடுத்தது.