பட்டானி குண்டுவெடிப்பு 2017
பட்டானி குண்டுவெடிப்பு 2017 | |
---|---|
இடம் | பட்டானி, தாய்லாந்து |
நாள் | 9 மே 2017 தாய்லாந்து நேரப்படி பிறபகல் 02:30 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | பொதுமக்கள் |
தாக்குதல் வகை | வாகன வெடிகுண்டு |
இறப்பு(கள்) | 0 |
காயமடைந்தோர் | 80 (நால்வர் படுகாயம்) |
தாக்கியோர் | இஸ்லாமியப் பிரிவினைவாதிகள் |
தாய்லாந்து நாட்டின் பட்டானி நகரில் மே 9, 2017 அன்று பெருங்கடையில் (Supermarket) நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 80 பேர் காயமடைந்தனர். காயமடைந்த சிலருக்கு உடனடி மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. அதிக அளவு காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[1][2][3][4][5]
தாக்குதல்
[தொகு]உள்ளூர் நேரப்படி பிறபகல் 02:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல் குண்டு வெடித்த 10 நிமிட இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது குண்டு வெடித்தது. 1 ஆகஸ்ட் 2005 மற்றும் 11 மார்ச்சு 2012 ஆகிய நாட்களில் முன்னரே இப்பெருங்கடையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இரண்டு குண்டு வெடிப்புகளுக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. 100 கிலோகிராம் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் மற்றும் பெட்ரோல் ஆகியன இக்குண்டு வெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டன.[6]
சந்தேக தாக்குதல்தாரிகள்
[தொகு]இக்குண்டுவெடிப்பிற்காக இஸ்லாமிய பிரிவினைவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனர். ஆறு நபர்களைக் கொண்ட மூன்று குழுக்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என தாய்லாந்து காவல்துறையினர் நம்புகின்றனர்.[7] இதைத் தொடர்ந்து மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Car bomb wounds 60 at supermarket in southern Thailand". Swissinfo. 9 May 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Car bomb hit Thailand's troubled south, injures 51". Channel News Asia. 9 May 2017. Archived from the original on 12 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2017.
- ↑ "Double bombing hits Thailand's violence-plagued south". Al Jazeera. 9 May 2017.
- ↑ "Twin blasts at Thailand shopping mall leave at least 60 injured". International Business Times. 9 May 2017.
- ↑ "Thailand: Insurgents Bomb Southern Mall". Human Rights Watch. 9 May 2017.
- ↑ "Pattani suspects identified". http://www.nationmultimedia.com/. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "18 suspects in car-bombing of Big C". The Bangkok Post. 10 May 2017.
- ↑ "Pattani suspects identified". The Nation. 11 May 2017. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2017.