உள்ளடக்கத்துக்குச் செல்

படைப்புத் தொன்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படைப்பு (c. 1896–1902) by யேம்சு தொசொட்[1]

படைப்புத் தொன்மம் (Creation myth) என்பது, உலகம் எப்படித் தொடங்கியது, மக்கள் எவ்வாறு தோன்றினர் என்பவை குறித்த ஒரு குறியீட்டு விளக்கம் ஆகும்.[2][3] வழமையான பயன்பாட்டில் தொன்மம் என்பது, பொய்யான அல்லது அதீத கற்பனையான கதைகள் எனக் கருதப்பட்டாலும், முற்காலத்தில், இதை மக்கள் பொய்யாகக் கருதவில்லை. பண்பாடுகள் தமது படைப்புத் தொன்மங்களை உண்மை எனவே நம்பினர்.[4][5] இக்கதை வழக்கில் உள்ள சமூகத்தில், படைப்புத் தொன்மத்தை, உருவகமாகவும், குறியீட்டு வடிவிலும், சில வேளைகளில் வரலாற்று அடிப்படையிலும், ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்தும் ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.[6][7] இவை, எப்போதும் என்று இல்லாவிட்டாலும் பொதுவாக, ஒரு அண்டவியல் தொன்மம் எனவே கருதப்படுகிறது. அதாவது, இத்தொன்மங்கள் அண்டத்தைக் குழப்ப நிலையில் இருந்து ஒழுங்கான நிலைக்குக் கொண்டுவருவதாகக் கருதுகின்றனர்.[8]

எல்லாப் படைப்புத் தொன்மங்களும் பொதுவாகப் பல பொது அம்சங்களைக் கொண்டனவாக உள்ளன. இவை பெரும்பாலும் புனிதமானவையாகக் கருதப்படுவதுடன், அறியப்பட்ட எல்லா மத மரபுகளிலும் இவ்வகைத் தொன்மங்கள் காணப்படுகின்றன.[9] இக்கதைகளில் கதைத் திட்டமும், கதாபாத்திரங்களின் இருக்கும். கதாபாத்திரங்கள் கடவுளர் ஆகவோ, மனிதரை ஒத்த வடிவங்களாகவோ, பேசக்கூடியனவும் உருமாறக்கூடியனவுமான விலங்குகளாகவும் இருப்பதுண்டு.[10] இக்கதைகளுக்கான காலம் தெளிவற்றதாகவோ, தெளிவாகக் குறிப்பிடப்படாததாகவோ இருக்கும். இத்தொன்மங்கள் குறித்த சமூகத்தினருக்கு ஆழ்ந்த பொருள் பொதிந்த விடயங்கள் மீது கவனம் செலுத்துவதுடன், அவர்களுடைய மையமான உலகப்பார்வையையும், அண்ட அளவில் அவர்களது பண்பாட்டினதும் தனியாட்களினதும் அடையாளத்தையும் வெளிப்படுத்துவனவாகவும் இருக்கின்றன.[11]

படைப்புத் தொன்மங்கள் வாய்மொழி மரபாகவே உருவாயின. அதனால், இயல்பாகவே இவற்றுக்குப் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவையே தொன்மங்களின் மிகப் பொதுவான வடிவங்கள்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. An interpretation of the creation narrative from the first book of the Torah (commonly known as the Book of Genesis), painting from the collections பரணிடப்பட்டது 2013-04-16 at Archive.today of the Jewish Museum (New York)
  2. Encyclopædia Britannica 2009
  3. Womack 2005, ப. 81, "Creation myths are symbolic stories describing how the universe and its inhabitants came to be. Creation myths develop through oral traditions and therefore typically have multiple versions."
  4. "In common usage the word 'myth' refers to narratives or beliefs that are untrue or merely fanciful; the stories that make up national or ethnic mythologies describe characters and events that common sense and experience tell us are impossible. Nevertheless, all cultures celebrate such myths and attribute to them various degrees of literal or symbolic truth." (Leeming 2010, ப. xvii)
  5. Long 1963, ப. 18
  6. 6.0 6.1 Kimball 2008
  7. Leeming 2010, ப. xvii–xviii, 465
  8. See: Leeming 2010, Weigle 1987, Leonard & McClure 2004, Honko 1984, ப. 50
  9. Johnston 2009
  10. See: Johnston 2009, Encyclopædia Britannica 2009, Leeming 2011a, Long 1963
  11. See: Johnston 2009, Long 1963, Encyclopædia Britannica 2009, Leeming 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=படைப்புத்_தொன்மம்&oldid=3791403" இலிருந்து மீள்விக்கப்பட்டது