படிமம்:Ta-ori ulagellam.ogg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Ta-ori_ulagellam.ogg(Ogg Vorbis sound file, length 1 min 14 s, 132 kbps, file size: 1.17 MB)

இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.

சுருக்கம்

விளக்கம்
தமிழ்: ”தட்டாங்கல் ஆட்டம்” -பாடல்கள். ஒரே மாதிரியான உருண்டையான சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு இது.வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டை மேலும் சுவாரசியமானதாக்க பாட்டுப்பாடிக் கொண்டு ஆடுவர்.ஏழு கற்களைக் கொண்டு ஆடும் இவ்வாட்டத்தில் ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான் ஐந்தான்,ஆறான், ஏழான், எட்டான், ஒன்பதான், பத்தான் என பத்து பிரிவுகள் ஆட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்க வேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும் எடுக்கவேண்டிய விதத்திற்கும் விதிமுறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஆரம்பிக்கும் போது ஏழு கற்களையும் கீழே விரித்தவாறு போட்டுவிட்டு அதில் ஒரு கல்லை :தாய்ச்சிக்கல்” என கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கல்லை மேலே வீசியெறிந்துவிட்டு அது கீழே கைக்கு வந்து சேருமுன் கீழே கிடக்கும் மற்ற கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்ததைத் தொட்டுவிடக் கூடாது) கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து விழும் தாய்ச்சிக்கல்லைப் பிடித்துவிட வேண்டும்.தொடர்ந்து பத்தையும் தாய்ச்சிக் கல்லை கீழே விட்டுவிடாமல் ஆடிவிட்டால் மீண்டும் ஒண்ணானை கட்டை என்ற பெயரில் விளையாடி ஒரு கட்டை ஜெயித்ததாகக் கொள்ளப்படும். இந்த விளையாட்டை ஆடும்போது பாடப்படும் பாடல்கள் இங்கு தரப்பட்டுள்ளன (7, 8 நீங்கலாக).

பாடல்கள்:

ஒண்ணான்

ஓரி உலகெலாம் உலகெலாம் சூரியன்
சூரியன் தங்கச்சி சுந்தர வல்லிக்கு
நாளக் கழிச்சிக் கல்யாணம்.

இரண்டான்

ஈரிப்புச் செண்டுப்பூ;
ஈரிப்புச் செண்டுப்பூ இருதலையும் முல்லப்பூ
சூடிமுடிப்பவர்க்கு கொண்டையெலாம் தாழம்பூ.

மூன்றான்

மூவன்னா ராவணா;
மூவன்னா ராவணா
சாதி பிராமணா.

நான்கான்

நாலவெச்சு ரெண்டெடு;
நாலவெச்சு ரெண்டெடு
நாராயிணன் பேரிடு
பேரச்சொல்லி பிச்சையெடு

ஐந்தான்

அஞ்சலம் குஞ்சலம்;
அஞ்சலம் குஞ்சலம்
தம்பி சிதம்பரம்
தங்கச்சிமாப்பிளை வெண்கலம்.

ஆறான்

ஆறு குறுகுறு:
ஆறு குறுகுறு
அன்னத்தாய் பேரிடு.

ஏழான் -தெரியவில்லை.

எட்டான் -தெரியவில்லை.

ஒன்பதான்

ஒம்பந்தம்மா சாவாளோ;
ஒம்பந்தம்மா சாவாளோ
சாகும்போது ஏவாளோ
சங்குச்சத்தம் கேட்பாளோ.

பத்தான்

பத்தேபதிச்சுக்கோ;
பத்தேபதிச்சுக்கோ
வயித்தநெறிச்சுக்கோ
சொக்கலிங்கநாதருக்கு
சோத்தவடிச்சுக்கோ.

கட்டை

கட்டேகட்டே டேசிகா;
கட்டேகட்டே டேசிகா கம்மங்கட்டே டேசிகா
கொக்கக்கொரிச்சுவா கோழிமுட்டையிட்டுவா
நித்தங்குளிச்சுவா நீலப்பட்டுடுத்திவா
புதுக்கட்டை ஒண்ணு.
இந்த ஊடகக் கோப்பு தமிழ் விக்கி ஊடகப் போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது.

বাংলা | Deutsch | English | हिन्दी | italiano | македонски | മലയാളം | Nederlands | sicilianu | தமிழ் | తెలుగు | اردو | +/−
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் Booradleyp

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
w:ta:கிரியேட்டிவ் காமன்ஸ்
பண்புக்கூறுகள் அதே மாதிரி பகிர்
இந்த கோப்பு Creative Commons Attribution-Share Alike 3.0 Unported உரிமத்தின் கீழ் உள்ளது.
நீங்கள் சுதந்திரமாக:
  • பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
  • மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
  • பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
  • அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.

Captions

Add a one-line explanation of what this file represents

some value

author name string ஆங்கிலம்: Booradleyp
Wikimedia username ஆங்கிலம்: Booradleyp

copyright status ஆங்கிலம்

copyrighted ஆங்கிலம்

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

30 நவம்பர் 2011

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய13:26, 30 நவம்பர் 20111 min 14 s (1.17 MB)Booradleyp

பின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு

"https://ta.wikipedia.org/wiki/படிமம்:Ta-ori_ulagellam.ogg" இலிருந்து மீள்விக்கப்பட்டது