பசைக்கலப்படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசைக்கலப்படலம் (Mesohyl) என்பது பஞ்சுடலிகளில் காணப்படும் வழவழப்புள்ள ஊன்பசைகளால் நிறைந்த ஒரு பகுதியாகும். இது கலங்கள் நிறைந்த ஒரு சாறு/கரைசல் போலக் காட்சியளிப்பதால் பசைக்கலப்படலம் என அழைக்கலாம். இப்படலமானது பஞ்சுடலிகளில் அகப்படைக்கும் (Choaenoderm) புறப்படைக்கும் (Pinacoderm) இடையில் நிறைந்துக் காணப்படும் கலக்கூட்டுகள் நிறைந்த கரைசலாகும்.

பசைக்கலப்படலம் ஒரு வகையான இணைப்புத்திசுக்களை (Connective tissue) ஒத்துக் காணப்படுகிறது. இதில் பல கலங்களும் குறிப்பாக ரத்த வெள்ளையணுக்களை ஒத்த அமீபாகலங்கள், கலக்கட்டமைப்புகளுக்குத் தேவையான இழைகள் மற்றும் கட்டமைப்புப் பொருட்கள் நிறைந்துக் காணப்படுகின்றன.

பசைக்கலப்படலம் தசைநார்ப் புரதங்களும், இழைப்புரதங்களை ஒத்த மூலங்களும், கேலக்டின் மற்றும் டெர்மடோபாண்டின் எனும் மூலக்கூறும் நிறைந்த ஒரு கூட்டாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் பலப்புரதச்சட்டகங்கள் / பலபுரதக்கூறுகள் (Polypeptides) இதற்கு நல்ல அடித்தளமாக அமையப்பெற்று இதில் காணப்படும் கலங்கள் பற்றுதலுக்கும் அதில் நடக்கும் குறிகள் இடைக்கடத்தலுக்கும் (Signal transduction) கலவளர்ச்சிக்கும் (Cellular growth) துணை நிற்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • Janet Moore, (2001), An introduction to the invertebrates, 2nd edition, Cambridge University Press, 23-31
  • http://www.earthlife.net/inverts/porifera.html
  • Parma L, Fassini D, Bavestrello G, Wilkie IC, Bonasoro F and DC Carnevali, 2007, Ecology and physiologyof mesohyl creep in Chondrosia reniformis, Porifera Research Biodiversity, Innovation and Sustainability, 503 - 508
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசைக்கலப்படலம்&oldid=1361253" இலிருந்து மீள்விக்கப்பட்டது