பசீர் ஏ. தாகிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசீர் தாகிர் பாக்கித்தானின் பெராவில் பிறந்தவர். இவர் பாக்கித்தானின் வங்கி, தகவல் தொடர்பு மற்றும் அசையாச் சொத்து வணிகம் போன்ற துறைகளில் ஒரு முக்கிய நிறுவன நபராக உள்ளார்.

இவர் தாபி குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வாட்டீன் தொலை தொடர்பு வாரியத்தின் உறுப்பினர்ராகவும், வாரிட் சர்வதேச தொலை தொடர்பு நிறுவனத்தின் குழு உறுப்பினராகவும் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இவர் அபுதாபி குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாவார். இது முன்னணி முதலீட்டாளராக தாபி குழுமத்தின் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பாகும். வாரிய ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வங்கி அல்பாலா நிறுவன வாரிய தணிக்கைக் குழு ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். முன்னதாக, தாகிர் யூனியன் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளர்.

பாக்கித்தானில் வங்கி, நிதி ஆலோசனை மற்றும் முதலீடுகளின் பல்வேறு அம்சங்களில் இவர் வகித்த பங்கினை அங்கீகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான சீதாரா-இ-இம்தியாஸ் வழங்கி கௌரவிக்கப்பட்டார் . [1] இவர் சமீபத்தில் பாக்கித்தான் முதலீட்டு வாரியத்தின் குழு உறுப்பினராக இருந்தார்.

சாதனைகள்[தொகு]

தாகிர் நவம்பர் 1962 முதல் ஒரு தொழில் வங்கியாளராக இருந்துள்ளார். நிதி துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தினால், தாகிர் கடந்த 12 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது இணை முதலீட்டாளர்களுக்கு தனியார் பங்குகள் விற்பது மற்றும் வாங்குதல் முயற்சிகளை [2] அறிவுறுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் கவனம் செலுத்தியுள்ளார். தாகிர் இப்பகுதியில் உள்ள ஆளும் குடும்பங்களின் பல்வேறு குடும்ப அலுவலகங்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முன்னோடி ஆவார். இப்போது அபுதாபி குழு என்று அழைக்கப்படுகிறது. [3]

முதலீட்டாளர்களின் அபுதாபி குழும கூட்டமைப்பின் கீழ், பாக்கிஸ்தானின் நிதி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு திரு தாஹிர் நேரடியாக பொறுப்பேற்றுள்ளார். [4] [5] இது ஆப்பிரிக்கா மற்றும் சிஐஎஸ் ஆகியவற்றில் முதலீடுகளை தீவிரமாக வழிநடத்தியது. அங்குள்ள வங்கி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் குழு தனது இருப்பை விரிவுபடுத்த உதவுகிறது. [6] [7] [8] [9]

விருதுகள்[தொகு]

தாகிர் அதிகபட்ச சிவில் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். சித்தாரா-இ-இம்தியாஸ் என்ற விருது 2005 ஆகஸ்ட் 14 அன்று பாக்கித்தான் அதிபரால் வழங்கப்பட்டது. இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இது வழங்கப்பட்டது. [10] ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் வலுவான பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கான தனது சேவைகளை ஒப்புக் கொண்ட இவர் உலகளாவிய பாக்கித்தான் விருதைப் பெற்றவராவார். [11]

பொறுப்புகள்[தொகு]

தபி குழுமம் மற்றும் அபுதாபி குழுமத்தின் முதலீடுகள் பின்வருமாறு: [12] வங்கி அல்பாலா, யுனைடெட் பேங்க் லிமிடெட், வாரிட் தொலை தொடர்பு (பாக்கித்தான், வங்காளதேசம், காங்கோ குடியரசு, உகாண்டா மற்றும் ஜார்ஜியா), வாட்டீன் தொலைதொடர்பு, கேஓஆர் ஸ்டாண்டர்ட் வங்கி (ஜார்ஜியா), [13] ரசீன் தொழில் நுட்பங்கள், அல் ராசி உடல்நலம் மற்றும் தொழில்துறை, மருந்து மற்றும் நுகர்வோர் பிரதான துறைகளில் பிற முதலீடுகள் போன்றவை.

தாகிர் எச்.எச். ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானின் நலன்களை தனது குழு உறுப்பினர்கள் மூலமாகவும், தனி நபர் நிறுவனங்களை தீவிரமாக கண்காணித்து ஆலோசனை செய்வதன் மூலமாகவும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [14]

குறிப்புகள்[தொகு]

  1. "Award- (Sitara-i-Shujaat, Sitara-i-Imtiaz Award).". Pakistan Press International. March 2006. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-14004728_ITM. பார்த்த நாள்: 9 February 2010. 
  2. "Abu Dhabi Group targets Asia, Africa - ArabianBusiness.com". Arabian Business. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  3. "Royal flush - - ITP.net". பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  4. "SingTel and Warid Telecom announce a Strategic Partnership in Pakistan – SingTel". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  5. "Bharti says agrees to buy 70 pct of Warid Bangladesh". Reuters. 12 January 2010 இம் மூலத்தில் இருந்து 9 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120709090829/http://in.reuters.com/article/2010/01/12/idINIndia-45323820100112. 
  6. "Warid eyes bigger play with Indian partners". The Times of India. 18 January 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-01-18/news/28395151_1_bangladesh-telecom-essar-group-wimax-spectrum. 
  7. "UAE's Abu Dhabi Group pays $42 mln for Georgian bank". Reuters. 11 March 2008 இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130201063830/http://www.reuters.com/article/2008/03/11/georgia-abudhabigroup-idUSL1131333620080311. 
  8. "Abu Dhabi Group Expands into Africa". பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  9. "Ericsson and Warid Telecom strengthen managed services partnership in Pakistan – Press Release". பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  10. "President confers 192 civilian awards – Newspaper". Dawn. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  11. "404 error". Masala!. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. {{cite web}}: Cite uses generic title (help)
  12. "Abu Dhabi Group". Warid Telecom. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "The Messenger – Abu Dhabi Group buys Standard Bank". Messenger. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  14. "Bank Alfalah not being sold or merged: CEO". The News International. Pakistan. 11 January 2011. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_ஏ._தாகிர்&oldid=3561463" இலிருந்து மீள்விக்கப்பட்டது