உள்ளடக்கத்துக்குச் செல்

பசந்த மஞ்சரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்த மஞ்சரி தேவி
Basanta Manjari Devi
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், ஒடிசா
தொகுதிரன்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1900 (1900)
இறப்பு(1961-06-07)7 சூன் 1961[1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரஞ்சி நாராயண் சிங் தியோ

பசந்த மஞ்சரி தேவி (Basanta Manjari Devi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1900 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசாவின் முதலாவது பெண் அமைச்சராக அறியப்படுகிறார். 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரேகிருட்டிணா மகாதாபு அரசாங்கத்தில் சுகாதாரத் துறையின் துணை அமைச்சராக பசந்த மஞ்சரி தேவி இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பசந்த மஞ்சரி தேவி பிரித்தானிய இந்தியாவில் இருந்த நீலகிரி மாநிலத்தின் அரச குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சியாம சந்திர பஞ்சா மர்தராச்சு அரிசந்தன் ஆவார்.[1] இராணாபூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரஞ்சி நாராயண் சிங் தியோவை மணந்து கொண்டார். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக ரன்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரேகிருட்டிணா மகதாபு அமைச்சகத்தில் சுகாதாரம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராகப் பதவி வகித்தார்.[2]

சுதந்திர இந்தியாவில் பசந்த மஞ்சரி தேவி 1953 ஆம் ஆண்டில் ஒடிசாவின் துணை சுகாதார அமைச்சராக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Odisha Legislative Assembly, Odisha Legislative Assembly. "Odisha Legislative Assembly". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16.
  2. Civic Affairs. P. C. Kapoor at the Citizen Press. 1946. p. 3-PA124. பார்க்கப்பட்ட நாள் 2020-07-16. Srimati Basanta Manjari Devi (Health, Relief and Rehabilitation)
  3. Humanities, National Endowment for the (1952-07-18). "Madison County Democrat. (London, Ohio) 19??-1958, July 18, 1952, Image 4". https://chroniclingamerica.loc.gov/lccn/sn88077521/1952-07-18/ed-1/seq-4/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_மஞ்சரி_தேவி&oldid=3799157" இலிருந்து மீள்விக்கப்பட்டது