பங்குபற்றி அவதானித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பங்குபற்றி அவதானித்தல் (Participatory observation) சமூக ஆய்வுகளில் தரவு சேகரித்தல் முறைகளில் முக்கியமான ஒன்றாகும். உலகில் தினமும் வாழ்வில் எம்மைச் சுற்றி பல விடயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இடம்பெறும் விடயங்களைப் பல தேவைகளுக்காக நாம் அறியவேண்டி உள்ளது. மக்கள் குழுக்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள பயன்படும் அவதான முறையானது பங்குபற்றி அவதானித்தல் மற்றும் பங்கு பற்றாமல் அவதானித்தல் என பிரதானமாக இரு வகைப்படும். அவதானிக்கப்படும் நபர் அல்லது குழுக்களோடும் அவர்களின் நடத்தைகளோடும் தீவர ஈடுபாடுதல் ஊடாக நெருங்கிய பழக்கத்தை அல்லது புரிதலை பெறுவதே பங்குபற்றி அவதானித்தலின் நோக்கம் ஆகும்.

பங்குபற்றி அவதானித்தல் முறை பண்பாட்டுத் தொல்பொருளியலில் முதன்மையாகப் பயன்படுகிறது. சமூகவியல், தொடர்பாடல் துறை, சமூக உளவியல் போன்ற துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.