உள்ளடக்கத்துக்குச் செல்

பங்கஜ் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கஜ் திரிபாதி
2017-இல் நடந்த பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கஜ் திரிபாதி
பிறப்புபங்கஜ் திவாரி[1]
5 செப்டம்பர் 1976 (age 48)
பேல்சந்து, கோபால்கஞ்ச் மாவட்டம், பீகார், இந்தியா[2]
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மிருதுளா (தி. 2004)
பிள்ளைகள்1

பங்கஜ் திவாரி என்ற பெயரில் பிறந்த பங்கஜ் திரிபாதி (Pankaj Tripathi) (பிறப்பு: செப்டம்பர் 5,1976) ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் இந்தித் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் பணியாற்றுகிறார்.[3][4] இரண்டு தேசியத் திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புப் பற்றி படித்த பிறகு, திரிபாதி ஓம்காரா (2006) மற்றும் அக்னிபத் (2012) போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். மேலும் பவுடர் (2010) என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு துணை வேடத்தில் நடித்தார்.

அனுராக் காஷ்யப்பின் குற்றப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ் ஆஃப் வாசிபூர் (2012) படத்தில் நடித்ததற்காக திரிபாதி அங்கீகாரம் பெற்றார். அதன் பிறகு பல குறிப்பிடத்தக்க துணை வேடங்களில் நடித்தார். ஃபுக்ரே (2013), மசான் (2015), நில் பேட்டே சன்னாடா (2016), பரேலி கி பர்ஃபி, ஃபுக்ரே ரிட்டர்ன்ஸ் (இரண்டும் 2017), ஸ்த்ரீ (2018), லுடோ, குஞ்சன் சக்சேனா: கார்கில் கேர்ள் (இரண்டும் 2023), மற்றும் 2028 (2028) ஆகியவை இதில் அடங்கும். திரிபாதி மிர்சாபூர் (2018–தற்போது வரை) மற்றும் மேலதிக ஊடக சேவையில் ஒளிபரப்பட்ட கிரிமினர் ஜஸ்டிஸ் (2019–2022) உள்ளிட்ட பல தொடர்களிலும், காகஸ் (2021) என்ற திரைப்படத்திலும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். இவர், காலா (2018) என்ற தமிழ்த் திரைப்படத்திலும் எக்ஸ்ட்ராக்ஷன் (2020) என்ற ஆங்கில படத்திலும் தோன்றியுள்ளார்.

நியூட்டன் (2017) திரைப்படத்தில் நடித்ததற்காக திரிபாதி தேசிய திரைப்பட விருதை பெற்றார்.[5] மிமி (2021) படத்தில் இவரது நடிப்பு இவருக்கு தேசிய திரைப்பட விருதையும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது.[6] [7] அதன் பிறகு திரிபாதி சமூக நையாண்டி படமான ஓஎம்ஜி 2 (2023) மற்றும் நகைச்சுவை திகில் படமான ஸ்த்ரீ 2 (2024) ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மெயின் அடல் ஹூன் என்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் வாச்பாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்தப் படம் 2024 ஜனவரி 19 அன்று வெளியானது.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

திரிபாதி 1975 அல்லது 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய மாநிலமான பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பரௌலியின் பேல்சந்து கிராமத்தில், கன்னியாகுப்ஜ பிராமணக் குடும்பத்தில்[8] பண்டிட் பெனாரஸ் திவாரி மற்றும் ஹேம்வந்தி திவாரி ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார்.[2][9][10][11] தனது 11 ஆம் வகுப்பு வரை விவசாயியாகவே வாழ்ந்தார். கிராமத்தில், விழாக்காலங்களில் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.[12] இவரது கூற்றின்படி கிராமத்து மக்களால் வழங்கப்பட்ட பாராட்டும் அங்கீகாரமுமே நடிப்பைத் தனது தொழிலாகத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் அமைந்தது.[13] பின்னர் இவர் உயர்நிலைப்பள்ளி முடித்த பிறகு பாட்னாவிற்குச் சென்றார். தனது நாடகக்கலையை கற்றுக்கொண்ட இடத்தில் கல்லுாரி அரசியலில் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பில் உறுப்பினராக செயல் மிக்க நிலையில் இருந்தார். தான் நடிப்புத் தொழிலில் தோல்வியைச் சந்திக்க நேரிடுமோ என்ற பயனத்தில் விடுதித் தொழிலையும் கற்றுக் கொண்டார். பாட்னாவில் 7 ஆண்டுகள் இருந்த பிறகு இவர் புதுதில்லிக்குச் சென்று தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார்.அங்கிருந்து 2004 இல் பட்டம் பெற்றார்.[14] [15]

தொழில் வாழ்க்கை

[தொகு]

தேசிய நாடகப் பள்ளியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு, திரிபாதி மும்பைக்கு 2004 ஆம் ஆண்டில் வந்தார். அதே ஆண்டில் ரன் (2004) திரைப்படத்தில் நடித்தார். இருப்பினும், இதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டில் கேங்ஸ் ஆப் வாசிபுர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்குப் பிறகே, பரவலாக அங்கீகரிக்கப்பட்டு புகழடைந்தார். சுல்தான் குரேசி என்ற கறிக்கடைக்காரர் வேடத்திற்காக இவரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 8 மணி நேர அளவிற்கு நடந்தது.[16][17] 2008 ஆம் ஆண்டில் இவர் பாகுபலி தொலைக்காட்சித் தொடருக்காகTவும் பவுடர் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் சோனி தொலைக்காட்சிக்காக பணிபுரிந்தார். இவரது தொடக்க கால தொழில் வாழ்வில், பெரும்பாலும் தாதா அல்லது தாதாவுக்கு நிகரான எதிர்மறைக் கதாபாத்திரங்களிலேயே நடித்தார்.[18][19] பின்னர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து அதற்காக திறனாய்வு அடிப்படையிலான பாராட்டுதல்களைப் பெற்றார்.[20] முன்னணி கதாபாத்திரமாக நடித்த குர்கான் திரைப்படம் 2017-இல் வெளிவந்து. 2017ஆம் ஆண்டில் இவர் நடித்த மற்றொரு திரைப்படமான நியூட்டன் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்காக பரிந்திரைக்கப்பட்டது.[21] ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்திலும் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.[22]

திருமண வாழ்க்கை

[தொகு]

2004 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் இவர் மிருதுளா என்பவரை மணந்தார். அவருக்கு மகள் ஒருவர் உண்டு.இவர்களுக்கு 2006 இல், ஆஷி திரிபாதி என்ற மகள் பிறந்தாள்.[23]

பிற பணிகள்

[தொகு]

திரிபாதி, ஸ்டார் பிளஸ், டாட்டா தேனீர், ரெட்மி, பாலிசிபஜார் போன்ற பொருட்களுக்கு விளம்பரதாரராகவும் உள்ளார்.[24] [25] நவம்பர் 2023 இல், இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் இவரை தனது நிறுவனத்தின் “பாதுகாப்புத் தூதராக” நியமித்தது.[26] தனது நடிப்பு வாழ்க்கையுடன், திரிபாதி மரம் வளர்ப்பு போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.[27] 2023 ஆம் ஆண்டில், தனது தந்தையின் நினைவாக, கோபால்கஞ்சில் உள்ள பேல்சந்துவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு நூலகத்தைத் திறந்தார்.[28] வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்திய தேர்தல் ஆணையத்துடனான இவரது தொடர்பை கௌரவிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் திரிபாதியை “தேசியக் குறியீடாக” அறிவித்தது.[29]

திரிபாதி 2024 ஆம் ஆண்டிற்கான பாரத் ரங் மகோத்சவ் எனும் தேசிய நாடக விழாவின் விளம்பரத் தூதராக உள்ளார்.[30] [31]

கலைத்திறன் மற்றும் ஊடக பிம்பம்

[தொகு]

திரிபாதி ஒரு முறை நடிகராக அறியப்படுகிறார்.[32] மேலும் இவரது வழக்கத்திற்கு மாறான பாத்திரத் தேர்வுகளுக்காக பரவலாக அறியப்படுகிறார்.[33] தி வயர் இதழில் நம்ரதா ஜோஷி இவரை ஒரு "இயற்கை நடிகர்" என்று குறிப்பிட்டார். மேலும், "திரிபாதிக்கு எந்த வேடத்தையும் கொடுங்கள், அவர் அதை தனது தனித்துவமான பாணியால் - குறைந்தபட்ச, எளிதான, அவசரமற்ற முறையில் - தனக்கெனச் செய்வார்" என்றும் எழுதினார்.[34] தி இந்து, "நாங்கள் அவரை நிஜத்தை விட திரையில் அடிக்கடி சந்தித்து வருகிறோம், ஒன்றன்பின் ஒன்றாக சக்திவாய்ந்த நடிப்பில்" எனக் குறிப்பிட்டது.[35] வெற்றியின் எழுச்சியில், இந்தியன் எக்சுபிரசு பத்திரிக்கையின் ஏ. காமேஸ்வரி, "ஆரம்பகால வேடங்களில் பெரும்பாலும் 'பெயரிடப்படாத கதாபாத்திரம்' என்று புகழப்பட்ட நடிகர், இப்போது அவருக்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்ட பாத்திரங்களைக் கொண்டுள்ளார்" என எழுதினார்.[36]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sharma, Sudhirendar (3 May 2022). "How Did Pankaj Tiwari Become Pankaj Tripathi Long Before He Dreamt of Being an Actor?". Outlook India இம் மூலத்தில் இருந்து 3 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220503113118/https://www.outlookindia.com/art-entertainment/how-did-pankaj-tiwari-become-pankaj-tripathi-long-before-he-dreamt-of-being-an-actor-news-194689. 
  2. 2.0 2.1 "Story of Pankaj Tripathi: From jail cell, hotel kitchen to big screen". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Press Trust of India. 10 June 2018 இம் மூலத்தில் இருந்து 8 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181008222358/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/story-of-pankaj-tripathi-from-jail-cell-hotel-kitchen-to-big-screen/articleshow/64529484.cms. 
  3. "Pankaj Tripathi turns 46: A look back at his iconic films and roles". தி எகனாமிக் டைம்ஸ். 5 September 2022. https://economictimes.indiatimes.com/magazines/panache/buzz/pankaj-tripathi-turns-46-a-look-back-at-his-iconic-films-and-roles/articleshow/94003018.cms. 
  4. "Pankaj Tripathi the star who refuses to stop experimenting". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 5 September 2022. https://www.hindustantimes.com/entertainment/bollywood/pankaj-tripathi-the-star-who-refuses-to-stop-experimenting-101662362907380-amp.html. 
  5. "National Film Awards 2018 complete winners list: Sridevi named Best Actress; Newton is Best Hindi Film". Firstpost. 13 April 2018. https://www.firstpost.com/entertainment/national-film-awards-2018-complete-winners-list-sridevi-named-best-actress-newton-is-best-hindi-film-4429915.html. 
  6. "Pankaj Tripathi Gets A Special Mention For His Performance In Newton At 65Th National Awards". தி டெக்கன் குரோனிக்கள். 14 April 2018. https://www.deccanchronicle.com/videos/pankaj-tripathi-gets-a-special-mention-for-his-performance-in-newton-at-65th-national-awards.html. 
  7. "National Film Awards 2018 complete winners list: Sridevi named Best Actress; Newton is Best Hindi Film". Firstpost. 13 April 2018. https://www.firstpost.com/entertainment/national-film-awards-2018-complete-winners-list-sridevi-named-best-actress-newton-is-best-hindi-film-4429915.html. 
  8. "Pankaj Tripathi : Rise of a versatile actor". Biografar.
  9. "Pankaj Tripathi Birthday Special! 10 Dialogues That Prove His Acting Prowess". News18. 5 September 2022. https://www.news18.com/news/movies/pankaj-tripathi-birthday-special-10-dialogues-that-prove-his-acting-prowess-5880703.html. 
  10. Unfiltered By Samdish ft. Pankaj Tripathi | Full Video, 20 May 2022, retrieved 20 May 2022 – via YouTube
  11. Guftagoo with Pankaj Tripathi. Rajya Sabha TV. 5 April 2016 – via YouTube.
  12. "Oscar में इस बिहारी एक्टर की मूवी, अभी भी मिट्टी के चूल्हे पर बनता है खाना". dainikbhaskar. 22 September 2017. https://www.bhaskar.com/news/BIH-PAT-HMU-pankaj-tripathi-newton-nominated-for-oscar-5702111-PHO.html. 
  13. "Oscar में इस बिहारी एक्टर की मूवी, अभी भी मिट्टी के चूल्हे पर बनता है खाना" (in hi). dainikbhaskar. 22 September 2017. https://www.bhaskar.com/news/BIH-PAT-HMU-pankaj-tripathi-newton-nominated-for-oscar-5702111-PHO.html. பார்த்த நாள்: 29 September 2017. 
  14. Raza, Danish (5 August 2017). "Pankaj Tripathi, the scene-stealer of 'Gurgaon'". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 3 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003174449/http://www.hindustantimes.com/bollywood/pankaj-tripathi-the-scene-stealer-of-gurgaon/story-47lVowafdXhQJKUQPbelJJ.html. 
  15. Ramnath, Nandini (20 April 2016). "The Pankaj Tripathi interview: 'The audience should be in the same room as the character'". Scroll.in இம் மூலத்தில் இருந்து 24 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160824210301/http://thereel.scroll.in/806894/the-pankaj-tripathi-interview-the-audience-should-be-in-the-same-room-as-the-character. 
  16. Joshi, Namrata (19 September 2017). "Acting is like a journey into unexplored terrain, says Pankaj Tripathi" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/entertainment/movies/acting-is-like-a-journey-into-unexplored-terrain/article19715919.ece. பார்த்த நாள்: 29 September 2017. 
  17. "Kaala Karikaalan actor Pankaj Tripathi: Gurgaon is a very special film for me". The Indian Express. 8 July 2017. http://indianexpress.com/article/entertainment/bollywood/gangs-of-wasseypur-actor-pankaj-tripathi-gurgaon-is-a-very-special-film-for-me-4741452/. பார்த்த நாள்: 1 October 2017. 
  18. Kaushal, Ruchi (28 January 2017). "'Nil Battey Sannata' is my story: Pankaj Tripathi - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Nil-Battey-Sannata-is-my-story-Pankaj-Tripathi/articleshow/51940287.cms. பார்த்த நாள்: 29 September 2017. 
  19. "Don’t like people appreciating my negative roles: Pankaj Tripathi". The Indian Express. 30 April 2016. http://indianexpress.com/article/entertainment/bollywood/dont-like-people-appreciating-my-negative-roles-pankaj-tripathi-2777706/. பார்த்த நாள்: 1 October 2017. 
  20. Rishabh Suri (20 September 2017). "Bareilly Ki Barfi actor Pankaj Tripathi: Cinema is not just a medium of entertainment" (in en). Hindustan Times. http://www.hindustantimes.com/bollywood/bareilly-ki-barfi-actor-pankaj-tripathi-cinema-is-not-just-a-medium-of-entertainment/story-nGBi1vJuJmGQiw2kZ9OlAI.html. பார்த்த நாள்: 1 October 2017. 
  21. "‘Newton’ is India’s official entry to Oscars 2018" (in en-IN). The Hindu. 22 September 2017. http://www.thehindu.com/entertainment/movies/newton-indias-official-entry-for-the-oscars/article19734480.ece. பார்த்த நாள்: 30 September 2017. 
  22. "Rajini is my idol, working with him has been so enriching: Pankaj Tripathi on ‘Kaala’". The News Minute. 22 September 2017. http://www.thenewsminute.com/article/rajini-my-idol-working-him-has-been-so-enriching-pankaj-tripathi-kaala-68846. பார்த்த நாள்: 1 October 2017. 
  23. "Pankaj Tripathi used to work as a cook earlier, got work in films after years of struggle". abcFRY.com. 5 September 2022 இம் மூலத்தில் இருந்து 7 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220907064134/https://abcfry.com/pankaj-tripathi-used-to-work-as-a-cook-earlier-got-work-in-films-after-years-of-struggle/. 
  24. "How Pankaj Tripathi has become the face of three national brands". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 19 June 2019. https://www.business-standard.com/amp/article/current-affairs/how-pankaj-tripathi-has-become-the-face-of-three-national-brands-119061901354_1.html. 
  25. "Xiaomi India ropes in Pankaj Tripathi as brand ambassador for Redmi lineup". Telecom தி எகனாமிக் டைம்ஸ். 16 May 2023. https://telecom.economictimes.indiatimes.com/news/devices/xiaomi-india-ropes-in-pankaj-tripathi-as-brand-ambassador-for-redmi-lineup/100275354. 
  26. "NPCI appoints Pankaj Tripathi as 'UPI Safety Ambassador'. Check UPI safety details to follow". Mint. 7 November 2023. https://www.livemint.com/industry/banking/npci-appoints-pankaj-tripathi-as-upi-safety-ambassador-check-upi-safety-details-to-follow-11699358889814.html. 
  27. "Pankaj Tripathi appeals for tree plantation on 'Daan Utsav'". India TV News. 5 October 2021. https://www.indiatvnews.com/entertainment/celebrities/pankaj-tripathi-appeals-for-tree-plantation-on-daan-utsav-738721. 
  28. "Pankaj Tripathi opens library in his village, dedicates it to late father". இந்தியா டுடே. 11 September 2023. https://www.indiatoday.in/movies/celebrities/story/pankaj-tripathi-opens-library-in-his-village-dedicates-it-to-late-father-2434055-2023-09-11. 
  29. "Pankaj Tripathi made 'national icon' by Election Commission of India, recalls his first experience of voting". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 3 October 2022. https://www.hindustantimes.com/entertainment/bollywood/pankaj-tripathi-made-national-icon-by-election-commission-of-india-101664804395756-amp.html. 
  30. "Bharat Rang Mahotsav (National Theatre Festival) Set to Enthrall Mumbai from 1st Feb". Bru Times News.
  31. "मुंबई में 1 फरवरी से शुरू होगा भारत रंग महोत्सव, पंकज त्रिपाठी होंगे ब्रांड एंबेसडर". ஆஜ் தக். 27 January 2024. https://www.aajtak.in/india/news/story/25th-bharat-rang-mahotsav-to-begin-from-february-1-says-pankaj-tripathi-ntc-1867969-2024-01-27. 
  32. Patcy N (2 April 2018). "Exclusive - Bollywood is ga-ga over Pankaj Tripathi". Rediff.com. Retrieved 29 November 2020.
  33. "I'm aware of expectations from me: Pankaj Tripathi". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 3 March 2019. https://www.business-standard.com/amp/article/pti-stories/i-m-aware-of-expectations-from-me-pankaj-tripathi-119030300273_1.html. 
  34. Joshi, Namrata (21 August 2020). "Pankaj Tripathi: The Star of Simplicity". The Wire (India). https://m.thewire.in/article/film/pankaj-tripathi-the-star-of-simplicity/amp. 
  35. Joshi, Namrata (28 November 2018). "Three actors who have made Bollywood their own". தி இந்து. https://www.thehindu.com/entertainment/movies/three-actors-who-have-made-bollywood-their-own/article25608866.ece/. 
  36. Kameshwari, A. (28 July 2021). "Life has taught me a lot: Pankaj Tripathi explains his choices in films and life". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/entertainment/web-series/pankaj-tripathi-explains-his-choices-in-films-and-life-mimi-7423196/lite/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pankaj Tripathi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_திரிபாதி&oldid=4262882" இலிருந்து மீள்விக்கப்பட்டது