பக்கோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கோரா (Pakora) என்பது இந்திய துணைகண்டத்தில் தோன்றிய பொறித்தெடுக்கப்படும் ஓர் உணவு வகை.[1][2] இது பக்கோடா, பக்கோடி, ஃபக்குரா, பஜ்ஜி, பொனாகோ என்றும் அழைக்கப்படுகிறது.[3] புகழ் பெற்ற இந்திய உணவான இது, உணவகங்களிலும் தெருவோரக் கடைகளிலும் விற்கப்படுகிறது.[4] மேற்கத்திய நாடுகளின் இந்திய உணவகங்களில் இது பெரும்பாலும் காணப்படுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

"பக்கோரா" என்ற சொல் "பக்வடா"[5] என்ற வடமொழி சொல்லிலிருந்து தோன்றியதாகும். பக்வடா என்ற சொல், பக்வ (சமைத்த) மற்றும் வடா (சிறு துண்டு) அல்லது வடகா[6] என்ற அதன் திாிபின் கூட்டுச் சொல்லாகும்.

பெயர்கள்[தொகு]

இந்தியாவில், முக்கியமாக மகாரஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் போன்ற இடங்களில் இது பஜ்ஜி என்றே அழைக்கப்படுகிறது. எந்த காயால் பஜ்ஜி செய்யப்படுகிறதோ அதன் பெயரை முன் சேர்த்து அழைப்பது வழக்கம். எடுத்து காட்டாக, உருளைக் கிழங்கு பஜ்ஜி என்பது உருளைக் கிழங்கை மாவில் தோய்த்து பொறித்தெடுப்பதாகும். இம்மாநிலங்களில், பக்கோடா என்பது நன்கு நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், மசாலாவை மாவுடன் சேர்த்து செய்யப்படும் உணவைக் குறிக்கிறது. இவற்றை உருண்டையாகப் பிடித்தும் அல்லது உதிாி உதிாியாக எண்ணெயில் போட்டும் பொறித்து எடுக்கலாம். பக்கோடா வெளிப்புறம் மொறுகலாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.

செய்முறை[தொகு]

பக்கோரா வெங்காயம், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வாழைக்காய், கீரை, பன்னீர்,சேனைக்கிழங்கு, காலிஃபளவர், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றில் செய்யலாம். சில நேரங்களில், ரொட்டி, மரக்கோதுமை, நிலக்கடலை, மீன் மற்றும் கோழியிலும் செய்யப்படுவதுண்டு.[7] இவற்றைக் கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொறித்து எடுப்பர். வெங்காய பக்கோடா, உருளைக் கிழங்கு பக்கோடா, பாலக்கீரை பக்கோடா, பன்னீர் பக்கோடா மிகவும் விரும்பப்படுபவை. வெங்காயத்தை மட்டும் வைத்து செய்வதை வெங்காய பஜ்ஜீ என்றும் அழைப்பதுண்டு. பரங்கிக்காய் கொண்டும் பக்கோரா செய்யலாம்.[8]

பரிமாறுதல்[தொகு]

பக்கோராக்கள் சிற்றுண்டியாக அல்லது பசியைத் துண்டும் உணவாக பரிமாறப்படுகிறது. இந்தியத் திருமண விழாக்களில் மசாலா காஃபி அல்லது தேநீருடன் விருந்தினர்களுக்குப் பரிமாறப்படுகிறது. புளி, சட்டினி, அரைத்தா போன்றவையுடன் பரிமாறப் படுகிறது. வெளிநாடுகளில் புகழ் பெற்ற துரித உணவாக இந்திய வகை உணவகங்களில் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pakora - food". Britannica.com. Retrieved 23 January 2018.
  2. "Pakoras are tasty, versatile treats from India that work well as appetizers, snacks or meals". Seattletimes.com. 10 May 2016. Retrieved 23 January 2018.
  3. "Take pride in the bonda or pakora. It is our gift to the world". M.hindustantimes.com. 18 April 2015. Retrieved 23 January 2018.
  4. Devi, Yamuna (1999). Lord Krishna's Cuisine: The Art of Indian Vegetarian cooking. New York: E. P. Dutton. pp. 447–466, Pakoras: Vegetable Fritters. {{ISBN|0-525-24564-2}}.
  5. R. S. McGregor, ed. (1997). The Oxford Hindi-English Dictionary. Oxford University Press. p. 588. {{ISBN|978-0-19-864339-5}}.
  6. Monier-Williams, Monier (1995). A Sanskrit-English Dictionary. Delhi: Motilal Banarsidass. p. 914. {{ISBN|81-208-0065-6}}. Retrieved 30 June 2010
  7. Arora, Ritu (2002). Healthy Kitchen: More Than 350 Oil Free Recipes. New Delhi, India: B. Jain publishers (P) Ltd. pp. 186, Bread Pakora. {{ISBN|81-8056-208-5}}.
  8. Neelam Batra. 1,000 Indian Recipes. Wiley Publishing. p. 19. ISBN 978-0-7645-1972-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கோரா&oldid=3363739" இருந்து மீள்விக்கப்பட்டது