பக்கிர் அலம்கிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்கிர் அலம்கிர்
Fakir Alamgir
Fakir Alamgir (1) (cropped).JPG
Alamgir (Feb 2014)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ফকির আলমগীর
பிறப்பு21 பெப்ரவரி 1950 (1950-02-21) (அகவை 71)[1]
இறப்பு23 சூலை 2021(2021-07-23) (அகவை 71)[2]
இசைத்துறையில்1966 – 2021

பக்கிர் அலம்கிர் (Fakir Alamgir, பிப்ரவரி 21, 1950 – சூலை 23, 2021) வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பாப் பாடகர் ஆவார். 1971 இல் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலை போரின் பின்னர் இவரது பாடல்கள் மக்களை உத்வேகபடுத்துபவையாக இருந்தது. இவரது பிரபல்யமான பாடல்களாவன " ஓ ஷொகினா", "ஷந்தகர்", " நெல்சன் மண்டேலா","நாம் ரர் ச்சில்லோ ஜோன் கென்றி" என்பனவாகும் [3]. 1999 இல் பங்களாதேஷ் அரசாங்கம் இவருக்கு " எக்ஷே பாடக்" எனும் விருதை வழங்கி கௌரவித்தது [4][3].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1966 இல் இவரது இசை வாழ்க்கை தொடங்கியது. இவர் 1969 இல் கிழக்கு பாகிஸ்தான் உதயத்தின் பின்னர் தன்னை பாடல்கள் பாடுவதற்காக அர்பணித்தார் [5]. விடுதலைப்போரின் போது இவர் சுவாதின் பெங்ல பேத்தர் கேந்ராவில் பணியாற்றியுள்ளார். இவர் 1976 இல் "ரிஷிஷ் ஷில்பி ஹோஷ்தி" இன அழைக்கபடும் கலாச்சார மன்றத்தின் நிறுவுனர் ஆகவும் செயற்பட்டுள்ளார் [6]. மேலும் இவர் "கோன சங்கித் சாமான்ய பாரிஷட்" என்பதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரது முதல் நூலான "செனா சீனா" 1984 ல் பிரசுரிக்கப்பட்டது. 2013 இல் இவர் மூன்று நூல்களை பிரசுரித்திருந்தார் [7].

விருதுகள்[தொகு]

  • எக்ஷே பாடக்
  • பஷானி பாடக்

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Fakir Alamgir's 67th birthday today" (2019-09-29).
  2. "Folk singer Fakir Alamgir no more" (2021-07-23).
  3. 3.0 3.1 "Fakir Alamgir performs live on Rtv". The Daily Star. 25 February 2010. http://www.thedailystar.net/news-detail-127850. பார்த்த நாள்: 29 January 2018. 
  4. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (in bn). Government of Bangladesh. http://www.moca.gov.bd/site/page/c706da0c-29ee-4f0f-95d9-fa6705e19001/. பார்த்த நாள்: 29 January 2018. 
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 40yrs என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. Harun ur Rashid (23 February 2005). "Fakir Alamgir: A singer of the masses". The Daily Star. http://archive.thedailystar.net/2005/02/23/d502231404113.htm. பார்த்த நாள்: 29 January 2018. 
  7. "Fakir Alamgir turns to fine print". The Daily Star. 16 February 2013. http://www.thedailystar.net/news-detail-269235. பார்த்த நாள்: 29 January 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கிர்_அலம்கிர்&oldid=3202797" இருந்து மீள்விக்கப்பட்டது