உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:பெண் தமிழ் எழுத்தாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண் தமிழ் எழுத்தாளர்கள் என்ற தனியான பகுப்பு அவசியமில்லை என்பது என் கருத்து. பெண் தமிழ் எழுத்தாளர்கள் என்ற கட்டுரையை எழுத்தாளர்கள் பகுப்பில் முதன்மைக் கட்டுரையாக இடுவதோடு அக்கட்டுரையில் பெண் எழுத்தாளர்களைப் பட்டியலிடலாம். எழுத்தாளர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ஆண் பெண் பகுப்புக்கள் ஆங்கிலத்தில் இல்லையென்றே நினைக்கிறேன். உண்மையில் பால்ரீதியான பகுப்புக்கள் அவசியமுமில்லை. கோபி 16:11, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பெண் தமிழ் எழுத்தாளர்கள் தமிழில் அரிது. அவர்களில் பலர் தங்களை அப்படி தனித்து அடையாளப்பத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்களின் பெயர்களை தமது புனைப்பெயர்களாக கொண்டுள்ள ஆண் எழுத்தாளர்களையும் இப்பகுப்பில் தவிர்த்து காட்டலாம். மேலும் எழுத்தாளர்கள் என்ற பகுப்பிலும் அவர்களை சேர்த்துக்கொள்ளலாம்தானே. இது ஒரு மேலதிக பயன்பாடுள்ள பகுப்பு என்றே நான் நினைக்கின்றேன். --Natkeeran 16:49, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆம். மேலதிக பகுப்பாகப் பயன்படுத்தலாம்.நன்றி. --கோபி 18:58, 10 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

பின்வரும் கட்டுரை வரிகளைக் காண்க,

"சங்ககாலப் பெண்பாற்புலவர்கள் குறித்த எண்ணிக்கையில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சங்க இலக்கிய அட்டவணை தயாரித்த ந.சஞ்சீவி 25 என்கிறார். பதிப்பாசிரியர் உ.வே.சா. 38 என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை 30 என்றும் புலவர் க.கோவிந்தன் 27 என்றும் கூறுகின்றனர். அவ்வை துரைச்சாமிப்பிள்ளை 34 என்கிறார். பெண்பாற் புலவர்களின் பாடல்களை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்த அவர் மகனார் அவ்வை நடராசன் 41 என்கிறார். நடராசனின் கணக்குதான் தர்க்கத்தோடு இருக்கிறது என்கிறார் ந.முருகேசப்பாண்டியன்." - பேரா. க. பஞ்சாங்கம்.கதைசொல்லி மே - ஆகஸ்ட் 2006.

இத்தகைய முரண்பாடுகள் வருங்காலத்தில் தவிர்க்க பெண் தமிழ் எழுத்தாளர்கள் என்ற பகுப்பு மேலும் உதவும். --Mathi 07:18, 13 செப்டெம்பர் 2006 (UTC) Mathi[பதிலளி]

மதி, சங்ககாலப் புலவர்களை வேண்டுமானால் ஒரு வேளை எண்ண இயலலாம். நிகழ்கால எழுத்தாளர்களை அப்படி எண்ணி முடிக்க முடியாது. கோபி சொன்னது போல் கூடுதல் பகுப்பாக இருப்பதில் பிரச்சினையில்லை. பயன்பாடும் உண்டு. தமிழில் நடிகர்கள் என்று சொன்னால் அது பெரும்பாலும் ஆண்களையே குறிக்கும். அதனால், நடிகைகள் என்ற தனிப்பிரிவு அவசியமாகிறது. ஆனால், பெரும்பாலான பிற துறைகளுக்கு இப்படி பால் வேறுபாடு காட்டாமல் பகுக்க வேண்டும் என்று கருதுகிறேன்--ரவி 08:01, 13 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]