பகுப்பு பேச்சு:தமிழ்ச் சுவடியியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்: இந்நூலகத்தில் சுமார் 13,000 தமிழ்ச் சுவடிகளில் நூற்றுக்கணக்கான தலபுராணச் சுவடிகள் உள்ளன.

தஞ்சை சரசுவதி மகால் சுவடி நூலகம் : இங்கு 50 தலபுராணச் சுவடிகள் உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி நூலகம்: இந்நூலகத்தில் சுமார் 4000 - க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றுள் சுமார் 160 தலபுராணச் சுவடிகள் உள்ளன.

உ.வே.சாமிநாதையர் நூலகம் : இங்கு மட்டும் சுமார் 140 தலபுராணச் சுவடிகள் உள்ளன. இவற்றுள் பல உ.வே.சா. அவர்களே தொகுத்தவையாகும்.

கேரளப் பல்கலைக்கழகச் சுவடி நூலகம் : இங்கு சுமார் 3340 தமிழ்ச் சுவடிகள் உள்ளன. இவற்றுள் சுமார் 140 தலபுராணச் சுவடிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அருணாசல புராணம் மட்டுமே 60 சுவடிகள் இருப்பது சுட்டத்தக்கது.

http://www.tamilvu.org/courses/diploma/d041/d0413/html/d0413667.htm

மேற்கோள்கள்[தொகு]

"மிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறும்போது, ‘‘தமிழக தொல்லியல் துறையிடம் 72,748 கட்டு ஓலைச்சுவடிகள் உள்ளன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 26 லட்சம் ஆகும். இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத் தோடு உள்ளது. தற்போது முதல்கட்டமாக 3 லட்சம் ஓலைச் சுவடிகளை இணையத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த ஓலைச்சுவடிகளை www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்’’ என்றார்." [1]

சுவடிகளின் உள்ளடக்கம்[தொகு]

"தமிழ் ஓலைச்சுவடிகளில் மருத்துவம், சோதிடம், சமயம், கலை, இலக்கியம், இலக்கணம், வரலாறு போன்ற பல்வேறு பொருண்மையில் காணக்கிடக்கின்றன. இவற்றுள் 60 விழுக்காட்டிற்கு மேற்பட்டவை மருத்துவம் போன்ற மரபுவழி அறிவியல் தொடர்பானவை என்று கணக்கிடப்பட்டுள்ளன. எஞ்சியவற்றுள் 25 விழுக்காடு கலை, இலக்கியம், சமயம், வரலாறு தொடர்பானவை. ஏனையவை சோதிடம், மாந்திரீகம், போன்ற நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தன என்று கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை தொடர்பான சுவடிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. ஆனால், ஓவியம் தொடர்பான இலக்கியம் கிடைக்கவில்லை." [2]

நூற்பட்டியல்கள்[தொகு]

நூல்கள்[தொகு]

  • ஓலைச்சுவடியியல் - மோ.கோ. கோவைமணி
  • ஓலைச்சுவடியியல் - முனைவர் ஆ. தசரதன்
  • சுவடிக்கலை - இரா. இளங்குமரன்