பகுப்பு பேச்சு:கவனிக்கப்படவேண்டிய கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவனிக்கப்படவேண்டிய கட்டுரைகள் என்கிற தலைப்பில் சேர்க்கப்படும் கட்டுரைகள் ஏன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான விளக்கத்தை அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். ஏனென்றால் அந்தக் கட்டுரைகளை எந்த கவனத்தில் எடுத்துக் கொள்வது? நீக்கப்படுகிற கட்டுரையாக எடுத்துக் கொள்வதா? இல்லை வளர்க்க வேண்டிய கட்டுரையாக எடுத்துக் கொள்வதா? இல்லை விக்கிப்பீடியாவின் நடையில் மாற்றம் செய்வதற்கான கட்டுரையாக எடுத்துக் கொள்வதா? இந்தப் பகுப்பில் கட்டுரைகளை இணைப்பது சரியாகப்படவில்லை. நீக்கம் என்றால் அந்தக் கட்டுரையில் அதற்கான வார்ப்புருவைச் சேர்க்கலாம். இதுபோல் வளர்க்க வேண்டிய கட்டுரைகளுக்கும் அதற்கான வார்ப்புருவைச் சேர்க்கலாம். நடை மாற்றத்திற்கும் அதற்கென உள்ள வார்ப்புருவைச் சேர்க்கலாம். இந்தப் பக்கத்தில் இணைப்பதன் அவசியம் அல்லது காரணம் குறிப்பிட வேண்டும். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:13, 26 நவம்பர் 2010 (UTC)

இந்த பகுப்புக்குள் இருக்கும் உப பகுப்புக்கள் நீங்கள் கேட்ட மாதிரி அமைந்தவையே. இது ஒரு பொதுப் பகுப்பு மட்டுமே. --Natkeeran 05:19, 27 நவம்பர் 2010 (UTC)