நோவா கொள்கை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நோவா கொள்கை விளக்கம்: இரட்டை நட்சத்திரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஹாய்ல் என்பவர் 1946 ஆம் ஆண்டு வெளியிட்ட நட்சத்திரக் கொள்கை நோவா கொள்கை ஆகும். சூரிய மண்டலத்தின் கன பரிமாணத்தை விட கோள்களின் கன பரிமாணம் மிகச்சிறியவை. மேலும் சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தூரத்தை ஆய்வு செய்யும் போது தூரம் அதிகமாக இருப்பினும் அவற்றின் கோணத்திணிவு வேகம் அதிகமாக உள்ளது. சூரியனில் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன. ஆனால் கோள்களில் எடை அதிகம் கொண்ட அணுக்கள் நிரம்பிய இரும்பு, சிலிகா, அலுமினியம் போன்ற தனிமங்கள் காணப்படுக்கின்றது. எனவே கோள்கள் சூரியனிடமிருந்து தோன்றியவை என்பதில் சந்தோகம் எழுந்து வேறு பொருட்களிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் லைட்டில்டன் என்பவர் இரட்டை நட்சத்திரக் கொள்கையை வெளியிட்டார். லைட்டில்டன் கொள்கையின் படி சூரியனும் அதன் ஜோடி நட்சத்திரமும் அருகருகே இருக்கும் போது புதிய நட்சத்திரம் அவற்றைக் கடந்து சென்றதால் ஜோடி நட்சத்திரத்திலிருந்து கோள்கள் தோன்றின என்று விளக்கப்படுகிறது. ஆயினும் புதிய நட்சத்திரம் வராமலே ஜோடி நட்சத்திரத்திலிருந்து கோள்கள் தோன்றின என்பது ஹாய்லின் நோவா கொள்கை ஆகும். கொள்கைகளின் அடிப்படைத் தத்துவம்: சூரியனும் மற்றொரு நட்சத்திரமும் இரட்டை நட்சத்திரங்களாகும். மேற்கண்ட இரண்டும் வெவ்வேறு கனபரிமாணமும், வெப்பமும் கொண்டிருந்தன. புதிய நட்சத்திரம் அதிகம் வெப்பம் மிகுந்தது. அணுக்கள் பெரியதாகவும், எடை அதிகமானதாகவும் இருந்தன. மேற்கண்ட புதிய நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட வெப்பக் கதிர் வீச்சு அதிகமாக இருந்ததால் ஹைட்ரஜன் முழுவதுமாகத் தீர்ந்து பயங்கரமாக வெடித்ததால் சூப்பர் நோவா உண்டானது. சூப்பர் நோவா வெடிப்பில் புதிய நட்சத்திரத்தின் பெரும்பலான பகுதியானது சூரியனின் ஈர்ப்பு விசைக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டது. சூப்பர் நோவா வெடிப்பிலிருந்து வெளியிட்ட வாயு வேகம் மட்டும் சூரியனால் உள்ளிழுக்கப்பட்டு சூரியனைச் சுற்றி சுழன்று வட்டமாக அமைந்தது. இதிலிருந்து கோள்கள் தோன்றின. மேற்கண்ட அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு நோவா கொள்கை அமைந்தது.

மேற்பார்வை நூல்: புவிப்புறவியல் - அனந்த பத்மநாபன்.என்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவா_கொள்கை_விளக்கம்&oldid=3585765" இலிருந்து மீள்விக்கப்பட்டது