நொதித்தல் ஐதரசன் உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நொதித்தல் ஐதரசன் உற்பத்தி (Fermentative hydrogen production) என்பது கரிம வினை வேதிமத்தை நொதிப்பு முறையில் உயிர்வழி ஐதரசனாக மாற்றும் செயலாகும். காற்றுநாடாச் செயல்முறை போலவே மூன்று படிநிலைகளில் இம்மாற்றம் நிகழ்கிறது. பலதரப்பட்ட பாக்டீரியா குழுக்கள் பல்நொதியங்களை உபயோகித்து இம்மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. கரும் நொதிப்பு வினைகளுக்கு ஒளியாற்றல் தேவைப்படுவதில்லை. எனவே இவ்வினையில் தொடர்ந்து இரவு பகல் கருதாமல் நாள் முழுவதும் கரிமச் சேர்மங்களில் இருந்து ஐதரசன் உற்பத்தி நிகழ்கிறது. பொதுவாக பாக்டீரியாக்கள் தொகுப்புமுறை உயிரியலைப் பயன்படுத்தி மரபுநிலையில் மாறுபடுகின்றன.[1][2]

ஒளிவழி நொதிப்பு, கரும நொதித்தலில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், ஒளிவழி நொதித்தலுக்கு ஒளி அவசியமானது ஆகும். நுண்ணுயிரிவகை எரிபொருள் மின்கலங்களில் உயிர்வினையூக்க மின்னாற்பகுப்பு செயல்முறை பயன்படுகிறது

பாக்டீரியா திரிபுகள்[தொகு]

உதாரணமாக தண்டு வடிவ ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களுடன் ஒளிவழி நொதித்தல் நிகழும்போது சிறுமூலக்கூறு கொழுப்பு அமிலங்கள் ஐதரசனாக மாற்றப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]