உள்ளடக்கத்துக்குச் செல்

நேரியல் ஆற்றல் பரிமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரவல் முகில் அறையில் மின்மமாக்கும் கதிர்வீச்சின் (இங்கே ஆல்பா துகள்கள்) பாதையைப் பார்க்கலாம். இதுவொரு நிகழ்படம் ஆகவே சிறிதுநேரம் பார்க்க வேண்டும்

ஒரு பொருளின் ஊடே பாயும் ஆற்றல் மிக்க துகளோ கதிரோ, அதாவது மின்மமாக்கும் கதிர்வீச்சு, அது செல்லும் பாதையில் ஊடுருவும் பொருள்களால் தன் ஆற்றலை இழக்கும் வீதம் நேரியல் ஆற்றல் பரிமாற்றம் (linear energy transfer, LET) எனப்படும்[1]. பொதுவாக ஓர் ஊடகத்தின் வழியாக ஒரு மைக்குரோ மீட்டர் தொலைவு செல்லும் போது எவ்வளவு ஆற்றலை ஊடுருவும் கதிர் இழக்கும் அளவு ஆகும். இதனை KeV/μ (கிலோ இலத்திரன்-வோல்ட்டு/மைக்குரோமீட்டர்) என்று குறிக்கப்படும். சிலவிடங்களில் ஒரு செ.மீ தொலைவில் இழக்கும் மெகா இலத்திரன்-வோல்ட்டு (MeV/cm) என்னும் அளவிலும் தருவதுண்டு.

இந்த நேரியல் ஆற்றல் பரிமாற்றம் என்பது ஆற்றல் கதிரின் தன்மைகளைப் பொருத்தும், ஊடகப்பொருளைப் பொருத்தும் அமையும். அதிக நேரியல் ஆற்றல் பரிமாற்றம் (அதிக நே.ஆ.பம்) என்றால் ஊடகப்பொருள் வழியே பாயும் ஆற்றலை மிகுதியாகக் குறைந்த தொலைவில் இழக்கச் செய்கின்றது. ஆகவே மொத்த ஆற்றலின் படிவும் குறைந்த இடத்தில் நிகழ்கின்றது. ஆகவே ஊடகப் பொருளில் கூடுதலான அமைப்புச்சிதைவை உண்டாக்கும். இதனால் அப்பொருள் தன்னியல்பான இயக்கப் பண்புகள இழக்க நேரிடும்; எடுத்துக்காட்டாக உயிரணுக்கள் (செல்கள்), நுண்மின்கருவிகள் ஆகியவற்றில். அதே நேரம் கதிரியக்கத்தின் தன்மையை அதிகம் உள்ளே அதிக தொலைவு செல்லாமலும் காக்கும். இந்த நேரியல் ஆற்றல் பரிமாற்ற (நே.ஆ.பம்) என்னும் கருத்து ஆற்றல் படிவவளவு இயலில் (dosimetry) கதிரியக்கத்தின் தாக்கத்தன்மையை அளவிட உதவும் கதிரிய படிவுமதிப்பெண் (radiation weighting factor) உருவாக்க உதவுகின்றது. பொதுவாக செல்லும் தொலைவால் (x) ஆற்றல் (E) இழக்கும் வீதத்தை dE/dx என்று கணக்கிடுவர்.

அடிக்குறிப்புகளும் மேற்கோளும்[தொகு]

  1. International Commission on Radiation Units and Measurements (October 2011). Seltzer, Stephen M.. ed. "Fundamental Quantities and Units for Ionizing Radiation". Journal of the ICRU 11 (1). doi:10.1093/jicru/ndr012. ICRU report 85a. http://www.engin.umich.edu/class/ners580/ners-bioe_481/lectures/pdfs/2011-04-ICRU_Report85a-QuantitiesUnits(revised).pdf. பார்த்த நாள்: 18 December 2012. [தொடர்பிழந்த இணைப்பு]