உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள் தருண் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள் தருண் தளம்
Nepal Tarun Dal
नेपाल तरूण दल
உருவாக்கம்26 அக்டோபர் 1953 (72 ஆண்டுகள் முன்னர்) (1953-10-26)
தலைமையகம்காட்மாண்டு

நேபாள் தருண் தளம் (Nepal Tarun Dal) என்பது நேபாளி காங்கிரசு கட்சியின் இளைஞர் பிரிவாகும். இந்த அமைப்பு நேபாளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பணி நிலை குழுக்களுடன் மிகவும் செல்வாக்கு மிக்க இளைஞர் அமைப்புகளில் ஒன்றாகச் செயல்படுகிறது. தருண் என்ற பெயரில் இந்த அமைப்பு ஒரு பத்திரிகை வெளியீடும் உள்ளது.

வரலாறு

[தொகு]

2012 ஆம் ஆண்டு நேபாள தருண் தளம் அரசாங்கம் திட்டமிட்ட தேர்தல் அரசியலமைப்பிற்கு முரணானது என்று தங்கள் நம்பிக்கையை தெரிவித்தது.[1] 14 ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று நேபாளி காங்கிரசு கட்சி 45 உறுப்பினர்களைக் கொண்ட தருண் தளத்தின் மத்திய குழுவை அறிவித்தது. உதயா சம்சேர் ராணா இக்குழுவிற்கு தலைமை தாங்கினார். நேபாள தருண் தால் அதன் 4 ஆவது தேசிய பொது மாநாட்டை பிப்ரவரி 2013 முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டது.[1]

நபி ராணா மகர் படுகொலை

[தொகு]

2013 ஆம் ஆண்டில், இக்குழுவின் உறுப்பினர் நபி ராணா மகரின் மரணம் அரசியல் பழிவாங்கலுக்காக கொலை செய்யப்பட்டதாக நம்புவதாகவும் இக்குழு கூறியது. சல்லேரி வ.உ.சி.க்கு அருகில் உள்ள குன்றின் அடியில் நபி ராணா மகர் கண்டெடுக்கப்பட்டார், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2022-02-28.
  2. "Tarun Dal says its leader Rana's murdered for 'political revenge'". 6 November 2013. Archived from the original on 3 மார்ச் 2016. Retrieved 28 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-21. Retrieved 2022-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள்_தருண்_தளம்&oldid=3658779" இலிருந்து மீள்விக்கப்பட்டது