நேகா சாகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

நேகா சாகின்
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு1989/1990 (அகவை 34–35)[1][2]
தமிழ்நாடு, இந்தியா
தொழில்

நேகா சாகின் (பிறப்பு 1992/1993) இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை நடிகையாவார். தொழில்நுட்ப இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போதே தனது பாலின தேர்வினால், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு சென்னைக்கு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். [3] சாகின், தன்னைப்போல பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைககளின் உரிமைக்காக போராடும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் அமைப்புகளிளும் பங்கெடுத்து பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது டிரான்ஸ் ரைட்ஸ் நவ் கலெக்டிவ் நிறுவனத்திலும் பணிபுரிந்துவருகிறார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவருடைய பாலின மாற்றத்தை புரிந்து கொள்ளாத இவரின் குடும்பத்தினரிடமிருந்து உடல், மன சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். இத்தகைய வன்முறைகளை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் தன்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழை மட்டுமே எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் சாகின். [4]

தொழில்[தொகு]

மனநல ஆலோசகராக பயிற்சி பெற்ற சாகின், அதை தொடர்ந்து தோழி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து அதற்கான அனுபவத்தையும் பெற்றுள்ளார். அந்த நிறுவனத்தில் இவரைப்போலவே பாதிப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் மனநல ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். அப்படியே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்துள்ளார். விகடன் குழும வெளியீடுகளில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். [5]

2022 ஆம் ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படமான அந்தரம் திரைப்படத்தில் அறிமுக நடிகராக நடித்துள்ளார். அதற்காக 52 வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் அறிமுகமான முதல் திருநங்கை என்ற விருதினையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. [6]

இந்த மலையாள திரைப்படத்தைத் தவிர, பிறவி, மனம் மற்றும் திருங்கள் போன்ற மூன்று குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Meet Negha S, winner of Kerala State film award for women and trans persons". The News Minute (in ஆங்கிலம்). 2022-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  2. "Negha Shahin- Fighting against the odds". Eastern. பார்க்கப்பட்ட நாள் 29 August 2022.
  3. "Want to play transwoman with superpowers: Actor Negha S". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  4. "'Award a recognition for transgender community'". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/award-a-recognition-for-transgender-community/article65476261.ece. 
  5. "Negha Shahin- Fighting against the odds" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  6. "Kerala film awards: Negha wins maiden award in trans category". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-28. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_சாகின்&oldid=3677570" இலிருந்து மீள்விக்கப்பட்டது