உள்ளடக்கத்துக்குச் செல்

நெரிவு (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெரிவு வகைகள்
நிரந்த மற்றும் கழற்றிமாற்றத்தக்க நெரிவுகள்

சுடுகலங்களில், நெரிவு / நெரிப்பு (ஆங்கிலம்: choke, ச்சோக்) என்பது, ஒரு சிதறுதுமுக்கியின் குழலுடைய சன்னவாய் முனையில் உள்ள ஓர் கூம்பு வடிவ இடுக்கு / குறுக்கம் ஆகும். நவீன சிதறுதுமுக்கிகளின் செயல்திறனை மேம்படுத்த கிட்டத்தட்ட எப்போதுமே நெரிவுகள் பயன்படுத்தப்படுகிறது. நெரிவை பயன்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், மேம்பட்ட வீச்செல்லை மற்றும் துல்லியத்தை அடைய, குண்டின் பரவலை நெறிப்படுத்துவதே ஆகும்.[1] குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு, திருகி-பொறுத்தவல்ல நெரிவுகளும் உள்ளன; கழற்றி மாற்றப்படும் தனிப்பாகமாக் இல்லாமல், குழலில் ஒருங்கிணைத்த வாறும் கூட சிதறுதுமுக்கியில் நெரிவுகள் உள்ளன.

உற்பத்தியின் போதே, குழலின் முனையை நசுக்கி, குழலோடு ஒருங்கிணைந்த பாகமாக, (நிரந்தரமான) நெரிவுகள் ஏற்படுத்தப்படும்; அல்லது ஒரு கழற்றி-மாற்றத்தக்க நெரிவுக்குழலை துப்பாக்கியின் முனையில் பொறுத்துவதற்கு ஏதுவாக, குழலின் முனையில் (உட்பக்கமாக) மரை வார்க்கப்படும்.

சிதறுதுமுக்கி குண்டுகளின் பரவல் கோலம்
முதல்வரிசை: நெரிவு அற்றது
இடமிருந்து வலமாக:
1. 20 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 204 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 302 குண்டுகள்
2. 30 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 172 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 262 குண்டுகள்
3. 40 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 130 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 233 குண்டுகள்
4. 50 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 76 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 162 குண்டுகள்
இரண்டாம் வரிசை: முழு நெரிவு
இடமிருந்து வலமாக:
1. 20 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் எல்லா 304 குண்டுகள்.
2. 30 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 278 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 302 குண்டுகள்
3. 40 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 233 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 298 குண்டுகள்
4. 50 யார்டு தொலைவில், 30 இன்ச் வட்டத்துள் 160 குண்டுகள், 4 அடி வட்டத்துள் 250 குண்டுகள்

 

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shotgun. (2011). Encyclopædia Britannica. Retrieved February 5, 2011, from Encyclopædia Britannica Online Library Edition: http://www.library.eb.com/eb/article-9067520
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரிவு_(சுடுகலன்)&oldid=2291135" இலிருந்து மீள்விக்கப்பட்டது