நெடுமொழி வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கணத்தில் நெடுமொழி வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "நெடுமொழி" என்பது "வீர உரை" அல்லது "பெருமித உரை" என்பதைக் குறிப்பது. பகைவருக்குத் தன்னுடைய பெருமையைத் தானே எடுத்துக் கூறுவதைப் பொருளாகக் கொண்டதால் இத்துறை "நெடுமொழி வஞ்சி" என்னும் பெயர் பெற்றது.

இதனை விளக்க, "பகைவர் படையை நெருங்கிச் சென்று தன்னுடைய ஆண்மையை எடுத்துச் சொல்வது"[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

ஒன்னாதார் படைகெழுமித்"
தன்னாண்மை எடுத்துரைத்தன்று

எடுத்துக்காட்டு[தொகு]

இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
முன்னர் வருக. முரண்அகலும் - மன்னர்
பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடைகுறுவார் விண்
- புறப்பொருள் வெண்பாமாலை 44.

குறிப்பு[தொகு]

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 76, 77

உசாத்துணைகள்[தொகு]

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமொழி_வஞ்சி&oldid=1551240" இருந்து மீள்விக்கப்பட்டது