நெடுங்குளம் வள்ளிக்கண்ணு அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெடுங்குளம் என்பது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இங்கே கிழக்கே அமைந்துள்ள கோவில் வள்ளிக்கண்ணு அம்மன் கோயில் ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

நரசிம்மன் ஆண்டதால் நரசிப்பிள்ள நெடுங்குளம் என்ற பெயர் பெற்றது.

தல வரலாறு[தொகு]

சிறுகுழந்தையாய் இவ்வூரைச் தஞ்சம் அடைந்த வள்ளிக்கண்ணுவை ராஜா தேடி வந்த போது அவள் பூமியில் புதையுண்டாள். அப்பெண்மணியே வள்ளிக்கண்ணு அம்மனாக இன்று பெயர் பெற்று விளங்குகிறாள்.

சிறப்புக் காரணம்[தொகு]

இவ்வூரில் மாடி வீடுகள் கட்டப்படுவதில்லை கோவிலின் மேற்கூரையைத் தாண்டி வீடுகள் கட்டப்படுவதில்லை.

மேற்கோள்[தொகு]

  1. தினமலர், தினத்தந்தி செய்திதாள்