நெக்சஸ் விஜயா

ஆள்கூறுகள்: 13°03′00″N 80°12′34″E / 13.0499°N 80.2095°E / 13.0499; 80.2095
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெக்சஸ் விஜயா
நெக்சஸ் விஜயா, சென்னை
இருப்பிடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்13°03′00″N 80°12′34″E / 13.0499°N 80.2095°E / 13.0499; 80.2095
முகவரி183, என்எஸ்கே சாலை, ஆற்காடு சாலை, வடபழனி, சென்னை
உருவாக்குநர்பிரஸ்டிஜ் குழுமம்
கடைகள் எண்ணிக்கை100
கூரை எண்ணிக்கை10
மொத்த வணிகத் தளப் பரப்பளவு650,000 sq ft (60,000 m2)
தள எண்ணிக்கை4
வலைத்தளம்www.nexusmalls.com/nexus-vijaya

நெக்சஸ் விஜயா என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் வடபழனி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பல்கடை அங்காடி வணிக வளாகமாகும்.[1][2][3] இது பிரெஸ்டீஜ் குழுமத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் சுமார் 650,000 சதுர அடி சில்லறை விற்பனை இடம் உள்ளது. அதன் நான்கு தளங்களில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆர்எம்கேவி, மேக்ஸ், ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட், வயா சவுத், லைஃப்ஸ்டைல், ஃபேப் இந்தியா மற்றும் வெஸ்ட்சைட் போன்ற பல முத்திரைகள் கொண்ட கடைகளைக் கொண்டிருப்பதன் மூலம் இந்த வணிக வளாகம் தன்னைத் தனித்துவப்படுத்திக் கொள்கிறது. இது பிவிஆர் திரையரங்குகள், பலாஸ்ஸோ மல்டிபிளக்ஸ் மற்றும் ஐமேக்ஸ் திரை ஆகியவற்றின் தாயகமாகவும் உள்ளது.

கடைகளின் அடிப்படையில், ஒவ்வொரு தளமும் சாதாரண உடைகளுக்கு தரை தளம், இன உடைகளுக்கு முதல் தளம், இரண்டாவது தளம் மின்னணு உபகரணங்கள் மற்றும் பயணம் தொடர்பான பொருட்கள் மற்றும் மூன்றாவது தளம் திரையரங்குகள் மற்றும் உணவு சார்ந்த கடைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பார்க் அவென்யூ, லைஃப்ஸ்டைல், அரோ, பேசிக்ஸ், லெவி, ஹைடிசைன், ரீபோக், நைக், பூமா, வைல்ட் கிராஃப்ட், சோச், லூயிஸ் பிலிப், இந்தியன் டெரெய்ன், அடிடாஸ், மெலஞ்ச், ரூஷ், கலாநிகேதன், ஜாக்கி, ஃபன்ஸ்கூல், மன்யவர், வான் ஹியூசன், யுஎஸ் போலோ அசோசியேஷன், கலர்பிளஸ், யுசிபி, மதர்கேர், ஃபர்ஸ்ட்க்ரை.காம், லெனோவா, ஹெச்பி, விட்கோ, விஐபி, கினி&ஜோனி மற்றும் பாட்டா ஆகியவை இந்த வணிக வளாகத்தில் உள்ள முத்திரைகள் கொண்ட கடைகளில் சிலவாகும்.

ஜீப்ரோனிக்ஸ், வயா சவுத், கேசியோ, ஸ்கேச்சர்ஸ், விவோ, ஐடி, சோனி, பூர்விகா, மோச்சி, தி அரவிந்த் ஸ்டோர், பீட்டர் இங்கிலாந்து, மேக்ஸ், வெனெட்டோ, ஃப்ளையிங் மெஷின், பிபா, குளோபல் தேசி, ஐமேக்ஸ், ஹெல்த் அன்ட் க்ளோ, ஆர்எம்கேவி, நல்லி, கலிடோஸ், ஃபுட் கோர்ட், சால்ட் ரெஸ்டாரன்ட், கேஎஃப்சி ரெஸ்டாரன்ட், ஃபெமிகா, ஸ்பார் ஹைப்பர்மார்க்கெட், ட்ரென்ட்ஸ் வுமன், சிம்சன், ஹவுஸ் ஆஃப் கேண்டி, ஏசிடி ஃபைபர்நெட், ஃபன் சிட்டி, ஹாம்லிஸ், வெஸ்ட்சைட், மெக்டொனால்ட்ஸ், லைம்லைட், எல்ஓரியல், கெரஸ்டேஸ் பாரிஸ், ஸ்னீக்கர்ஸ் ஆகியவை இங்குள்ள முக்கிய வணிக நிறுவனங்களாகும்.

இந்த வணிக வளாகத்தில் பிவிஆர் பலாஸ்ஸோ என்ற பெயரில் பிவிஆர் சினிமாஸின் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றும் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்கம் ஒன்றும் உள்ளன.

குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக, நிலை 3 மற்றும் 4 இல் ஃபன் சிட்டி அமைந்துள்ளது. கிட்டி ரைட்ஸ், ஃபோரம் எக்ஸ்பிரஸ் மற்றும் விஆர் கேம்ஸ் முதலியனவும் உள்ளடக்கம்.

நெக்ஸஸ் விஜயா வணிக வளாகத்தில் ஃபுட் கோர்ட் 'வயா சவுத்' எனப் பெயரிடப்பட்டிருப்பது, இங்குள்ள பெரும்பாலான உணவுக் கடைகளில், அவற்றின் உணவுகளில் தென்னிந்திய பாரம்பரியம் இருப்பதைக் குறிக்கிறது. இந்த ஃபுட் கோர்ட்டில் 650 இருக்கைகள் உள்ளன. மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, கலிடோஸ், ஜூனியர் குப்பண்ணா, பர்கர் கிங், டகோ பெல், டக் டக், பெய்ஜிங் பைட்ஸ், தோசை & கோ, வாவ்! மோமோ, பாண்டிக்கடை, வசந்த பவன், அரேபியன் ஹட், அமராவதி, டிப்ஸ் பிரான்கி, ஐபாகோ, ஸ்க்யூஸ் ஜூஸ் பார்ஸ், ஐபேக்ஸ், சாண்ட்விச் ஸ்கொயர், மெட்ராஸ் காபி ஹவுஸ், குக்கீமேன், டோமினோஸ் பிஸ்ஸா, கிரிஸ்பி க்ரீம், கஃபே காபி டே, கல்மனே காஃபிஸ், சால்ட் ரெஸ்டாரன்ட், கிரீம் அன்ட் ஃபட்ஜ், சப்வே, பாம்பேஸ்தான், பெல்ஜியன் வாஃபிள் கம்பெனி, ஐடி, க்ரீம் சென்டர் போன்ற முக்கிய உணவுக் கடைகள் உள்ளன.

தகவல் மையம், முதலுதவி மையம், சக்கர நாற்காலி வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாய்மார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட வண்டிகள் நிறுத்துமிடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு அறைகள், குழந்தை பராமரிப்பு அறை, வண்டிகள் நிறுத்துமிடங்கள், தொலைந்து போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெறும் இடம், கார் ஸ்பா, ஏடிஎம்கள், இலவச வைஃபை, பிரார்த்தனை அறை, பைக் ஸ்பா, பிரீமியம் வண்டிகள் நிறுத்துமிடங்கள், பைகள் மற்றும் காலணிகள் பழுதுபார்க்குமிடம் ஆகியவையும் நெக்சஸ் விஜயா வணிக வளாகத்தில் உள்ள வசதிகளாகும்.

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NEXUS VIJAYA MALL VADAPALANI". juniorKuppanna (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.
  2. "Reliance Digital, Vadapalani". www.reliancedigitalstores.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.
  3. "Nexus Vijaya – Vadapalani – SALT – Indian Restaurant" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்சஸ்_விஜயா&oldid=3749117" இலிருந்து மீள்விக்கப்பட்டது