நெகிழிசை (செய்யுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெகிழிசை என்பது செய்யுட்களில் வல்லினம் விரவி வராமல் ஓரின எழுத்தே வருமாறு நெகிழத் தொடுக்கும் செய்யுள் ஓசையாகும்.

விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்
இரவுலவா வெலை ஒலியே - வரவொழிவாய்
ஆயர்வா யேஅரிவை ஆருயிரை ஈராகவோ
ஆயர்வாய் வேலியோ அழல்

இப்பாடலில் வல்லின எழுத்து வராமல் இடையினமாகிய ஓரினத்தாலேயே பாடப்பட்டதால் இது நெகிழிசை ஆயிற்று.

மேற்கோள்[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம், தண்டியலங்காரம். திருப்பனந்தாள் மட வெளியீடு.1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழிசை_(செய்யுள்)&oldid=959112" இருந்து மீள்விக்கப்பட்டது