நுரையீரல் இரத்த மிகு அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுரையீரல் இரத்த மிகு அழுத்தம்
ஒத்தசொற்கள்நுரையீரல் தமனி இரத்த மிகு அழுத்தம்,
Pulmonary Hypertension.png
நுரையீரல் இரத்த மிகு அழுத்தம்
சிறப்புPulmonology, இதயவியல்
வழமையான தொடக்கம்20 முதல் 60 வயது[1]
கால அளவுநீண்ட நாள்[2]
காரணங்கள்தெரியவில்லை [2]
சூழிடர் காரணிகள்குடும்ப மருத்துவ வரலாறு, எயிட்சு, அரிவாள்செல் சோகை, கோக்கைன் பயன்பாடு, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உயர் கடல் மட்டத்தில் ஏற்படும் தூக்க நோய் [3][1]
சிகிச்சைநோயாளிகளிடம் பரிவு, மருத்தெடுத்தல், நுரையீரல் மாற்று மருத்துவம்
மருந்துEpoprostenol, treprostinil, iloprost, bosentan, ambrisentan, macitentan, வயாகரா[4]
நிகழும் வீதம்ஒவ்வொரு வருடமும், 1,000 புதிய நோயாளிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றுகின்றனர்

நுரையீரல் இரத்த மிகு அழுத்தம் (pulmonary hypertension) என்பது குறிப்பாக நுரையீரல் தமனியின்[2] இரத்த அழுத்த அளவு 30/15 மி.மீக்கு அதிகரித்தால், அதை இரத்தமிகு அழுத்தம் எனக் கொள்ள வேண்டும். நுரையீரல் இரத்த மிகு அழுத்தத்திற்குப் பல காரணங்கள் உள்ளன.[4] ஈரிதழ் எனப்படும் தடுக்கிதழ்களின் சுருக்கம் (mitral stenosis), இதயத்தின் மிகையான உந்துதல் இருதயத்தின் இடப் பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் [5][3] போன்றவை காரணமாக இருக்கலாம். சில வேளைகளில் எந்த ஒரு காரணமும் இல்லாமலும் இது நேரலாம்.[6] எ.கா.: முதல் நிலை நுரையீரல் இரத்தமிகு அழுத்த ம் (primary pulmonary hypertension). இந்நோயில் களைப்பு, மார்பு வலி, உடல் வீக்கம், இருமலில் இரத்தம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.[7][8]

தோற்றம்[தொகு]

நுரையீரல்களுக்கு இரத்தம் வழங்குதல் இரண்டு வகைகளில் நிகழ்கிறது. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் தமனிக்குச் செல்லும் இரத்தம், இறுதியில் மூச்சு நுண்ணறைகளிலுள்ள நுண்ணிய தந்துகிகள் மூலம் நுரையீரல் சிரைகளை அடைந்து, இடது வென்ட்ரிக்கிளுக்கு வந்து சேர்கிறது. இதை மூச்சு மண்டல இரத்தச் சுழற்சி என்று கூறலாம். மற்றொரு நிலையில் மாத்தமனியில் இருந்து கிளைத்து வரும் மூச்சுக்குழல் தமனிகள் (bronchial arteries) நுரையீரல்களுக்கு இரத்தத்தை வழங்குகின்றன. இந்த இரத்தத்தின் ஒரு பகுதி பெருஞ்சிரைகளுக்குள்ளும் (vena cava), நுரையீரல் சிரைகளுக்குள்ளும் செல்கிறது. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து, இடது ஆரிக்கிளுக்கு இரத்தம் வந்து சேர நான்கு வினாடிகள் ஆகின்றன. இந்த இருவகை இரத்தப் பாய்ச்சலை , நுரையீரல் - மூச்சுக் இரத்தச் சுழற்சி (pulmonary bronchial circuit) என்பர். இச் சுழற்சியில் தோன்றும் நோய்கள் நுரையீரல் இரத்தச் சுழற்சி நோய்கள் (diseases of pulmonary circulation) என்றழைக்கப்படுகின்றன.

அறிகுறிகள்[தொகு]

  • கைகால்கள் வெப்பமாகவும், ஈரமாகவும் இருக்கும். கழுத்தின் சிரைகள் புடைத்துத் தோன்றும். இதயம் அளவில் பெரியதாக இருக்கும். இதய முணுமுணுப்புகளை ஸ்டெத் மூலம் கேட்கலாம்.
  • மிகையான இதய உந்துதலுக்குக் காரணமான சோகை, பேஜட் நோய் (Paget's Disease), தைராய்டு சுரப்பியின் மிகையான பணி போன்ற நோய்களின் அறிகுறிகளும் தெரியும். மூச்சு இடர்தான் இந்நோயின் முதன்மையான அறிகுறியாகும். கல்லீரலும் வீங்கிப் பெரிதாக இருக்கும்.
  • மார்பு எக்ஸ்கதிர்ப் படத்தில் நுரையீரல் தமனியும் வலது வென்ட்ரிக்கிளும், வலது ஆரிக்கிளும் பெரிதாகத் தோற்றமளிக்கும். பெருந்தமனி (Aorta) மூச்சு மண்டலம் சிறியதாக இருக்கும். மேற்கூறிய அறிகுறிகளைக் கொண்டே நோய் உறுதிசெய்து விடலாம். அண்மைக்காலத்தில் இதய மீ ஒலி அலகீடு (ECHO) மூலம் இந்நிலை உறுதிப்படுத்தப்படுகிறது.

மருத்துவம்[தொகு]

நுரையீரல் இரத்த மிகு அழுத்தத்திற்கான காரணம் தெரிந்தால், அதைத் தவிர்ப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். பொதுவாக உயிரி எதிர் மருந்துகள், மூச்சுக் குழல் விரிப்பு மருந்துகள் ஆகியவை ஓரளவு பலனளிக்கும். சில நிலைகளில் இரத்த உறைவு எதிர் மருந்துகள் அளிக்க வேண்டி வரும். இன்றைய நிலையில் உயிர்வளி பயன்படுகிறது. மொத்தத்தில் எந்த மருத்துவமும் நிரந்தரமான பலனை அளிக்காது என முன்பு கருதப்பட்டது. அண்மையில் 'கால்சியத் தடம் அடைப்பிகள்' (Calcium Channel Blockers) என்ற மருந்து வகைகள் பலனளிக்கலாம் என மருத்துவ ஆய்வுகளால் தெரிய வருகிறது. புரோஸ்டாசைக்லின் (PC), நைட்ரஸ் ஆக்சைடு (NO) என்பன புதிய மருத்துவ வரவுகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Who Is at Risk for Pulmonary Hypertension? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 31 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "What Is Pulmonary Hypertension? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 28 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "What Causes Pulmonary Hypertension? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 31 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Pulmonary Arterial Hypertension – NORD (National Organization for Rare Disorders)". NORD. 2015. 29 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "What Causes Pulmonary Hypertension? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 31 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. "How Is Pulmonary Hypertension Diagnosed? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 28 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. Pulmonary Hypertension - High Blood Pressure in the Heart-to-Lung System
  8. "How Is Pulmonary Hypertension Diagnosed? – NHLBI, NIH". NHLBI (ஆங்கிலம்). 2 August 2011. 28 July 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 July 2017 அன்று பார்க்கப்பட்டது.