நுண்ணுயிர் மிதவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணுயிர் மிதவைகள் , கடலில் மீனினங்களின் முக்கிய உணவாக பயன் படுகிறது நுண்ணுயிர் மிதவைகள் , நுண்ணுயிர் தாவர மிதவைகள்,நுண்ணுயிர் விலங்கின மிதவைகள் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன நுண்ணுயிர் மிதவைகள் 2 மி யு அளவு முதல் உள்ளது

நுண்ணுயிர் தாவர மிதவைகள்[தொகு]

நுண்ணுயிர் தாவர மிதவைகளுள் , டைனோஜெல்லட்டுகள் , டியாட்டம்கள் , அதி நுண்ணுயிர் மிதவைகள் அடங்கும் . இவை அனைத்தும் கடலில் முதல் நிலை உற்பத்தியாளர்கள் ஆகும். எனவே இவை கடல் வளத்திற்கு முக்கிய அடையாளமாக உள்ளன.

உணவு உற்பத்தி[தொகு]

நுண்ணுயிர் தாவர மிதவைகள் பச்சையம் சூரிய ஒளி, கடல் நீரில் கரி வளி மற்றும் நைட்ரைட்,பாஸ்பேட் , போன்ற ஊட்ட சத்துக்களையும் பயன் படுத்தி தேவையான உணவினை தாமே உற்பத்தி செய்வதால் இவை முதல் நிலை உற்பத்தியாளர்எனப்படுகின்றன

உற்பத்தி அளவு[தொகு]

நுண்ணுயிர் தாவர மிதவைகளின் உற்பத்தி எக்டேருக்கு 2 - 3 டன்கள். மொத்த நுண்ணுயிர் தாவர மிதவைகளின் உற்பத்தி 500 * 1000000000 டன்கள்

அவசர கால உணவு[தொகு]

நுண்ணுயிர் தாவர மிதவைகள் அவசரக்காலங்களில் உணவாக பயன்படுகிறது. மேலும் விண்வெளி பயணத்தின் பொழுது விண்வெளி வீரர்களுக்கு உணவாக பயன்படுகிறது . ஊட்டச்சத்துணவாகவும் பயன்படுகிறது

நுண்ணுயிர் விலங்கின மிதவைகள்[தொகு]

நமது கண்களுக்கு தெரியாத , கடற்பரப்பில் வாழும் உயிரினங்கள் நுண்ணுயிர் விலங்கின மிதவைகள் எனப்படும் இவற்றுள் முக்கியமானவை, கணுக்காலிகளை சேர்ந்த கொப்பிப் பாடுகள், போரேமினிப்பெரா, ட்யூனிகேட்டா, ஆம்பிபோடா, ரேடியோலேரியா.

உணவு[தொகு]

நுண்ணுயிர் தாவர மிதவைகள், நுண்ணுயிர் விலங்கின மிதவைகளுக்கு உணவாக பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மீன்வளப் பூக்கள் முனைவர் வெ .சுந்தரராஜ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிர்_மிதவைகள்&oldid=3181917" இலிருந்து மீள்விக்கப்பட்டது