நீரின் முரணிய விரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பனிக்கட்டி மற்றும் நீரின் அடர்த்தி-வரைபடம்

நீரின் முரணிய விரிவு (anomalous expansion of water) என்பது நீரின் எதிர்மறையான, மாறுபட்ட வெப்பநிலை மாற்றத்துடன் தோன்றும் மாற்றமாகும். பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது பொருட்கள் தம் பருமனளவில் விரிவையும், வெப்பநிலை குறையும் போது பருமனளவு குறைவதும் நிகழ்கின்றன. ஆனால் நீரினைப் பொருத்தமட்டில் நிலைமை மாறாக உள்ளது. வெப்பநிலை குறையும் போது 4 °C இல் அதன் அடர்த்தி 1.000 கிராம்\கன செ.மீ. ஆக உள்ளது. மேலும் வெப்பநிலை குறைந்து நீரின் வெப்பநிலை 0 °C ஆக உள்ளபோது அதன் அடர்த்தி 0.99987 கிராம்\கன செ.மீ. ஆகவும் 0 °C-ல் பனிக்கட்டியாக உள்ளபோது அடர்த்தியானது 0.917 ஆகவும் உள்ளது. 4 °C இற்குக் கீழ் வெப்பநிலை குறையும் போது பருமனளவு கூடுகிறது- அதாவது அடர்த்தி குறைகிறது. இதுவே நீரின் முரணிய விரிவாகும்.

இதனால் நன்மையும் தீமையும் ஏற்படுகின்றன. நன்மை யாதெனில் பனிப்படலத்திற்குக் கீழ் நீர், நீராகவே உள்ளது. மீனினங்கள் வாழ இது அவசியமாகிறது. தீது யாதெனில் மிகவும் குறைந்த வெப்பநிலையில் நீர் குழாய்கள் வெடித்து விடுகின்றன.

நீரின் அடர்த்தி அட்டவணை[தொகு]

நீரின் அடர்த்தி
வெப்ப அளவு (°C) அடர்த்தி (கிகி/மீ3)[1][2]
+100 958.4
+80 971.8
+60 983.2
+40 992.2
+30 995.6502
+25 997.0479
+22 997.7735
+20 998.2071
+15 999.1026
+10 999.7026
+4 999.9720
0 999.8395
−10 998.117
−20 993.547
−30 983.854

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, D. R. (Ed.) (1990). CRC Handbook of Chemistry and Physics (70th Edn.). Boca Raton (FL):CRC Press
  2. Water – Density and Specific Weight. Engineeringtoolbox.com. Retrieved on 2011-11-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரின்_முரணிய_விரிவு&oldid=2746181" இருந்து மீள்விக்கப்பட்டது