உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட கேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோள்பட்டைவரை நீளமான கேசம் கொண்ட ஒரு ஆண், 1599
இடுப்புவரை நீள கூந்தல் கொண்ட ஒரு பெண்

நீண்ட கூந்தல் அல்லது நீண்ட கேசம் (Long hair) என்பது நீண்டதாக வளர்க்கப்பட்ட தலை முடியைக் கொண்ட ஒரு சிகை அலங்காரத்தைக் குறிப்பது ஆகும். நீண்ட கேசம் என்ற நீள அளவைப் பொறுத்தவரை, கலாச்சாரத்துக்கு இடையில் மாற்றம் இருக்கலாம். உதாரணமாக, சில கலாச்சாரங்களில், நீளமுள்ள தலைமுடியைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, குறுகிய கூந்தலைக் கொண்டிருப்பதாகவும், அதே சமயம் அதே அளவு நீளமான முடியுள்ள ஆணை நீளமான முடி கொண்டவராகவும் கருதப்படலாம்.

பல கலாச்சாரங்களில் குறுகியதாக வெட்டப்பட்ட முடிகளைக் கொண்டவர்களாக ஆண்கள் உள்ளனர். இராணுவ வீரர்கள் அல்லது தண்டனைக்கு உள்ளாகி சிறையில் உள்ள கைதிகள் போன்றோர் ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் இருப்பார்கள். பெண்களின் நீண்ட பளபளப்பான முடி பொதுவான கலாச்சாரத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் கவர்ச்சிகரமாக மதிப்பிடப்பட்டது.[1][2] மக்கள் தொகையில் கூந்தல் நீளத்தால் (அடையளக் காமம்) காமுறுபவர்கள் 7% உள்ளனர். இந்தக் குழுவினரைப் பொறுத்த அளவில் நீண்ட தலைமுடி என்பது பக்திப் பொருள் போன்றதாகும்.[3][4]

உயிரியல் முக்கியத்துவம்

[தொகு]
நடு முதுகுவரை முடி கொண்ட ஒரு பெண்
நீண்ட முடி கொண்ட பெண்கள்

மனிதர்கள், குதிரைகள், மற்றும் ஒராங்குட்டான் ஆகியவை நீண்ட தலைமுடி வளரக்கூடிய சில உயிரினங்களில் ஒன்றாக உள்ளன்ன. மனிதர்கள் 2.5–3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடுகளில் இருந்து திறந்த புல்வெளிகளுக்கு வந்தபோது, இயற்கைத் தேர்வின் விளைவாக தன் உடலின் மென் மயிரை இழந்தனர். இது விரைவாக இயங்குவதற்கும், வெப்பமண்டல நிலப்பகுதிக்கு அருகில் உள்ள விலங்குகளை வேட்டையாட வசதியாகவும் இருந்தது. இதில் ஒரு விதிவிலக்கு தலை முடியாகும். தலைமுடியானது சூரியனிடம் இருந்து உச்சந்தலையை வெப்பத்தில் இருந்து காப்பதாகவும், புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கவும், மேலும் குளிர்ச்சி வழங்குவதாகவும் ( வியர்வையில் முடி நனைந்து) இருந்தது.[சான்று தேவை] நேராக முடி வளரக்கூடிய திறன் ஓமோ சேபியன்களிடையே காணப்படுகிறது. நிலநடுக்கோடுப் பகுதியில் வாழும் உப-குழுக்களிடையே நீண்ட கூந்தல் குறைவாகவே காணப்படுகிறது. ஒப்பீட்டளவில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் சில பகுதிகளில் வாழக்கூடிய சில இனத்தவர்களின் முடி முரட்டுத்தனமானதாகவும் பஞ்சுமிட்டாய் போல விரிந்த தோற்றமளிப்பதாகவும் காணப்படுகிறது. நேரான முடி, கூடுதலான புற ஊதாக் கதிர்கள் உச்சந்தலையை அடைய அனுமதிக்கிறது (இது வைட்டமின் டி உற்பத்திக்கு அவசியம், இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானது).

பதின்ம பருவத்தில் நீண்ட மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ப்பது ஒரு அடையாளமாக இருப்பது என்பது, பாலியல் தேர்வின் ஒரு பகுதியாக நீண்ட முடி செயல்படுவதன் காரணமாக இருப்பதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.[5]வார்ப்புரு:Quotation needed இந்த ஈர்ப்புக்கான ஒரு பரிணாம உயிரியல் விளக்கமானது, முடியின் நீளம் மற்றும் தரம் ஆகியவை ஒரு பெண்ணின் இனப்பெருக்க திறனையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும் ஒரு குறிப்பாக செயல்படுகிறது. முடி மெதுவாக வளரக்கூடியது. எனவே ஒருவரின் முடியின் நீளமானது அவரது 2-3 ஆண்டு காலஉடல் நிலை, ஊட்டச்சத்து, வயது மற்றும் இனப்பெருக்கத் தகுதி ஆகியவற்றினை வெளிப்படுத்தலாம். சத்துணவு இன்மையால் ஏற்படும் தாதுக்கள் மற்றும் வைட்டமின், ஊட்டச்சத்து குறைபாடுகளும் முடி இழப்பு அல்லது முடி நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன (எ.கா. கருத்த முடி சிவந்திருக்கும்).[6]

கலாச்சார பொருள்

[தொகு]

படை வீரர்கள் மற்றும் மத கலாச்சாரங்கள் போன்றவை, பெரும்பாலும் நீளமான முடி பற்றிய வெளிப்படையான கடுமையான விதிகளைக் கொண்டு உள்ளன. உதாரணமாக, புத்த சமயத் துறவிகள் தங்கள் வழிபாட்டு ஒழுங்கின்படி தங்கள் தலை முடிகளை மொட்டையடித்துக் கொள்வார்கள்.[7] அதே போல சைனத் துறவியரில் பெண்கள், ஆண்கள் என இருபாலரும் தலை முடிகளை நீக்கிக் கொள்வர். சில தசாப்தங்களுக்கு முன்புகூட கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் தங்கள் தலை முடியை மொட்டையடித்துக் கொண்டு இருக்க்கவேண்டும் என்ற கட்டுப்பாடு நிலவியது. நீண்ட முடியை கொண்டிருப்பது சமயப் பற்று கொண்ட ஆண்கள் எபிரேய விவிலியம் (சிம்சேன் ஒரு பிரபலமான உதாரணம்) மற்றும் சீக்கியர்களின் கடமை ஆகும். துணைப் பண்பாடு கலாச்சாரத்தில் ஆணின் நீளமான முடியை எதிர்மறையாகக் காணலாம், மேலும் சில நேரங்களில் அவற்றின் ஆட்சியாளர்களை முடி நீளம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது, இது போல ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த கேலிக் ஐரிஷ் மற்றும் எசுபானியாவின் ஆட்சியின் கீழிருந்த ஸ்பெயினின் ஆட்சிக்கு உட்பட்ட இடைக்கால எசுப்பானியா. போன்றது. [தெளிவுபடுத்துக]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Buss, David M. (2005). The handbook of evolutionary psychology. John Wiley and Sons. p. 309. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-26403-3. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  2. Bereczkei, T. (2007). "Hair length, facial attractiveness, personality attribution; A multiple fitness model of hairdressing". Review of Psychology 13 (1): 35–42. http://hrcak.srce.hr/9060?lang=en. 
  3. Scorolli, C; Ghirlanda, S; Enquist, M; Zattoni, S; Jannini, E A (2007). "Relative prevalence of different fetishes". International Journal of Impotence Research 19 (4): 432–7. doi:10.1038/sj.ijir.3901547. பப்மெட்:17304204. 
  4. "Heels top the global fetish leader board". England. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2018-04-08.
  5. Watson, James (2005). Darwin: the Indelible Stamp; the Evolution of an Idea. Philadelphia: Running Press. p. 1042. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7624-2136-3. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  6. Sugiyama, Lawrence S. (2005) "Physical Attractiveness in Adaptationist Perspective", Chapter 10 in Buss, David M. (ed.) The Handbook of Evolutionary Psychology. John Wiley & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-26403-3
  7. Edmund Leach (July 1958). "Magical Hair". Journal of the Royal Anthropological Institute 88 (2): 147–164. doi:10.2307/2844249. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_கேசம்&oldid=4041180" இலிருந்து மீள்விக்கப்பட்டது