உள்ளடக்கத்துக்குச் செல்

நீடுழை பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானுந்து ஒரு நீடுழை பொருள். அதற்கு ஆற்றல் அளிக்கும் பெட்ரோல் நீடித்து உழைக்காப் அல்லது நுகர்வுப் பொருளாகும்.

நீடுழை பொருட்கள் என்பவை நீண்டகாலம் பயன்படுத்துவதாக விரைவில் தேய்மானம் அடையாத பொருள்களாகும். குறிப்பாக அப்பொருள்களின் பயன்பாடுகள் மிக நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் நுகரும்வண்ணம் உள்ளதாகும். செங்கற்கள் இதற்கு மிக பொருத்தமான உதாரணமாகும். ஏனெனில் கட்டிடங்களில் உள்ள செங்கற்களின் தேய்மானம் என்பது அனேகமாக இல்லையென்றே கூறமுடியும். குளிர்சாதன பெட்டி அல்லது மகிழுந்து போன்ற நீடுழைப் பொருட்கள் தொடர்ந்து பல ஆண்டு பயன்பாட்டில் இருக்கும்.[1] எனவே நீடுழைப் பொருட்கள் பொதுவாக அடுத்தடுத்த கொள்முதல்களுக்கு இடையே நீண்ட காலத்திற்கு பயன்படுவதாக இருப்பதாக வகைப்படுத்தப்படுகின்றன. மோட்டார் வாகனங்கள், புத்தகங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், தங்க ஆபரணங்கள், மருத்துவ கருவிகள், விளையாட்டு பொம்மைகள் போன்றவைகள் நீண்டகால பொருட்கள் என அழைக்கலாம்.

நீடித்து உழைக்காப் பொருட்கள் விற்கும் கடையின் இடைகழி
நூகர் பொருட்களான குளிர்பானங்கள்

நீடித்து உழைக்காப் பொருட்கள் அல்லது மென்பொருள்கள் என்பவை நீடுழை பொருட்கள் என்பதற்கு எதிர்மறையானவை. நீடித்து உழைக்காப் பொருட்கள் என்பவை ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களாகவோ அல்லது மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான ஆயுட்காலம் கொண்டவை என வரையறுக்கபடலாம். எடுத்துக்காட்டாக அழகு சாதன பொருட்கள், துப்புறவு பொருட்கள், உணவு, எரிபொருள், பீர், சிகரெட்டுகள், மருந்துகள், புகையிலை, அலுவலக பொருட்கள், இரப்பர், நெகிழிகள், துணி, ஆடை, காலணி போன்ற விரைவாக நகரும் நுகர்வோர் பொருட்களும், நீடித்து நிலைக்க முடியாத பொருட்களும் ஆகும். நீடுழை பொருட்கள் பொதுவாக வாடகைக்கும் மறு விற்பனைக்கும் கிடைக்கும். ஆனால் நீடித்து உழைக்காப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே கிடைக்கும், வாடகைக்கு கிடைக்காது. நீடித்து உழைக்காப் பொருட்களை வாங்குவது ஒரு முதலீடாக கருதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. O'Sullivan, Arthur; Sheffrin, Steven M. (2003). Economics: Principles in Action. Upper Saddle River, New Jersey 07458: Pearson Prentice Hall. pp. 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-063085-8.{{cite book}}: CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீடுழை_பொருட்கள்&oldid=3600491" இலிருந்து மீள்விக்கப்பட்டது