நிறைவுப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் ஒரு பொருளை விற்கவும் வாங்கவும் போட்டி போடுகின்ற நிலமையே பொருளியலில் நிறைபோட்டி அல்லது நிறைவுப்போட்டி (Perfect competition) எனப்படும்.

இவ்வாறான நிலமை காணப்படும் சந்தை அமைப்பு ‘’’நிறைவுப்போட்டி சந்தை’’’ எனப்படும்.இச்சந்தை அமைப்பில் பண்டங்களுக்கான விலையானது சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் நிரம்பல் மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கபடும்.உற்பத்தியாளனோ அல்லது நுகர்வோனோ பண்டங்களின் விலையில் ஆதிக்கம் செலுத்தமுடியாது.இச் சந்தை அமைப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

தேவைகள்[தொகு]

சந்தை அமைப்பில் நிறைபோட்டி நிலவ சிலஅம்சங்கள் தேவையாக உள்ளது அவைகள்,

  • எண்ணிறைந்த உற்பத்தியாளர்களும் எண்ணிறைந்த வாங்குபவர்களும் காணப்படல்

விலை தொடர்பில் உற்பத்தியாளர்க வாங்குபவர்களின் ஆதிக்கம் இல்லாதொழிக்கப்படுகின்றது

  • ஒரினத்தன்மையான பண்டங்களை உற்பத்தி செய்தல்
  • பிரவேச சுதந்திரம் காணப்படல்

நிறுவனங்கள் உட்பிரவேசிக்கவும்,வெளியேறவும் சுதந்திரம் காணப்படுவதால் சந்தையை கட்டுபடுத்தும் ஆற்றல் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் குவிவது காணப்படாது. இதற்கு எதிரானது தனியுரிமை

  • உற்பத்தியாளரும் நுகர்வோனும் சந்தை பற்றிய பூரணஅறிவுள்ளவராகக்காணப்படல்

பொருள் பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால விளம்பரப்படுத்தல் காணப்படாது.

இவ்வாறான தேவைகளை பூர்த்தி செய்யுமிடத்தே அங்கு நிறைவுப்போட்டி தோன்றும், உலகநடைமுறையில் இச்சந்தை அமைப்பு காணப்படுவது அரிது

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைவுப்போட்டி&oldid=2089220" இருந்து மீள்விக்கப்பட்டது