நின்றொளிர்மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்குரலின் நின்றொளிர்மானி (1873-1874)

நின்றொளிர்மானி (Phosphoroscope) என்பது ஒரு நின்றொளிர் பொருள் கிளர்வடைந்ததற்குப் பின்னர், எவ்வளவு நேரத்தில் ஒளிர்தலை நிறுத்துகிறது என்பதை அளவிடும் ஒரு சிறிய கருவியாகும் [1] துளையுள்ள வட்டுகள் இரண்டு இக்கருவியில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வட்டிலும் உள்ள துளைகள், சமமான கோணத்தையுடைய ஆரக் கோடுகளுடன் மையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்படுகின்றன, ஆனால் அவை ஒன்றுடன் ஒன்றாக நேராக சீரமைக்கப்படுவதில்லை. நின்றொளிரும் பொருளின் மாதிரி இரண்டு வட்டுகளுக்கும் இடையில் வைக்கப்படுகிறது. முதல் வட்டில் உள்ள துளையின் வழியாக வரும் ஒளி நின்றொளிரும் பொருளின் மீது பட்டு அதை கிளர்வூட்டுகிறது. இதனால் நின்றொளிரும் பொருள் சிறிது நேரத்திற்கு ஒளியை உமிழ்கிறது. வட்டுகள் சுழல விடப்படுகின்றன. இவ்வட்டுகளின் சுழலும் வேகத்தை மாற்றியமைப்பதன் மூலம் நின்றொளிர் பொருட்களின் ஒளிரும் காலத்தை உறுதி செய்ய முடியும்.

நேற்கோள்கள்[தொகு]

  1. "Natural Philosophy Collection. Bequerel's [sic] Phosphoroscope". University of Aberdeen. பார்க்கப்பட்ட நாள் 2014-12-16.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நின்றொளிர்மானி&oldid=2330462" இலிருந்து மீள்விக்கப்பட்டது