நிக்கி மினாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி மினாஜ்

நிக்கி மினாஜ்(Nicki Minaj) (பிறப்பு:டிசம்பர் 8, 1982) அமெரிக்காவின் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகையாக அறியப்படுபவர்.[1][2][3] இவரது இயற்பெயர் ஓனிகா தான்யா மரஜ் ஆகும். இவர் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் செயிண்ட் ஜேம்ஸ் நகரில் பிறந்தவர். இவர் ஜமைக்கா,க்யுன்ஸ் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் வளர்ந்தார்.இவர் வெளியிட்ட ப்ளேடைமிங் இஸ் ஓவர் (Playtime is Over), சுக்கா ஃப்ரி (Sucka Free) மற்றும் பீம் மி அப் ஸ்கூட்டி (Beam Me Up Scotty) ஆகிய பாடல் தொகுப்புகளுக்குப் பின்னர் புகழ்பெறத் தொடங்கினார். 2009 ஆம் ஆண்டு யங் மனி எண்டர்டெயின்மெண்ட் (Young Money Entertainment) எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட பிங் ஃபிரைடே இசைத் தொகுப்பு அமெரிக்காவில் முதலிடத்தைப் பிடித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nicki Minaj Biography". The Biography Channel. April 22, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ramirez, Erika (December 8, 2012). "A Nicki Minaj Birthday Card, from Billboard". Billboard. Prometheus Global Media. December 9, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Police Report: Nicki's Asst. Struck Minaj w/ Suitcase". TMZ. Time Warner. July 11, 2011. July 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_மினாஜ்&oldid=3298354" இருந்து மீள்விக்கப்பட்டது