நார்மன் இராபர்ட் போகுசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்மன் இராபர்ட் போகுசன் <> Norman Robert Pogson
பிறப்பு(1829-03-23)23 மார்ச்சு 1829
நாட்டிங்காம், இங்கிலாந்து
இறப்பு23 சூன் 1891(1891-06-23) (அகவை 62)
சென்னை, இந்தியா
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1856)

நார்மன் இராபர்ட் போகுசன் (Norman Robert Pogson), இ பே து (CIE) (23 மார்ச்சு 1829 – 23ஜூன் 1891) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் சென்னை வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்;வால்வெள்ளிகளின் நோக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். இவர் உடுக்கண பருமைகளுக்கான கணிதவியல் அளவுகோலை உருவாக்கியுள்ளார். இது போகுசன் விகிதம் அல்லது தோற்றநிலைப் பருமைகளின் விகிதம் என வழங்கப்படுகிறது. இது இரு தொடர்நிலைப் பருமைகளின் விகிதமாகும். இது நூறு எனும் எண்ணின் ஐந்தாம் வருக்க மூலமாக (~2.512) அமைகிறது.[1]

தகைமைகள்[தொகு]

இவருக்கு 1879 ஜனவரியில் இந்தியப் பேரரசுத் துணைவர் ஆணை வழங்கப்பட்டது.[2]

இவரது நினைவாகப் பெயரிடப்பட்ட வான்பொருட்கள்:

  • குறுங்கோள் 1830 போகுசன்
  • நிலாவின் போகுசன் குழிப்பள்ளம்
  • குறுங்கோள் 42 இசிசு இவரது மகள் எலிசபத் இசிசு போகுசன்

நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1.  Vibart, Henry Meredith (1885–1900). "Pogson, Norman Robert". Dictionary of National Biography. London: Smith, Elder & Co. 
  2. Reddy, V.; Snedegar, K.; Balasubramanian, R. K. (2007). "Scaling the magnitude: the fall and rise of N. R. Pogson". Journal of the British Astronomical Association 117 (5): 237–245. Bibcode: 2007JBAA..117..237R. 

வெளி இணைப்புகள்[தொகு]