நாராயணேசுவர் மகாதேவ் மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயணேசுவர் மகாதேவ் மந்திர் (Narayaneshwar Mahadev Mandir) [1]மற்றும் புனேசுவர் மகாதேவ் மந்திர் ஆகியவை புனேவில் உள்ள இரண்டு கோயில்களாகும்.[2] நிசாமுதீன் மற்றும் பிற மத போதகர்கள் தலைமையிலான தில்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ் இவை இடிக்கப்பட்டன.[3] இரண்டு சாமியார்கள் பின்னர் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர்.[4] நாராயணேசுவர் கோவிலின் மேல் கட்டப்பட்டுள்ள தர்கா இப்போது 'தோர்லா (மூத்த) சேக் சல்லா தர்காவா என்ற பெயரில் இங்கு உள்ளது. சனிவார் வாடாவிலிருந்து வெகு தொலைவில் முத்தா ஆற்றின் கரையில் இந்த தர்கா அமைந்துள்ளது.

புனே நகரில் உள்ள பாடலேசுவரருக்குப் பிறகு, இந்த கோயில் அதன் அசல் வடிவத்தில் இல்லை என்றாலும், ஆரம்பகால பெயரிடப்பட்ட கோயில்களில் ஒன்றாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Diddee and Gupta (2000). Pune Queen of the Deccan (First ed.). Pune: Elephant Design Pvt. Ltd. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87693-00-2.
  2. Department Central Excise, Govt. of India. "About Pune". Archived from the original on 16 September 2005. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
  3. Avinash Sovani (1998). Haravalele Pune (in மராத்தி) (First ed.). Purva Prakashan. p. 20.
  4. "Central Railway, Government of India". Central Railway, Ministry for Railways, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.