நாட்டிகா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டிகா கடற்கரை

நாட்டிகா கடற்கரை (Nattika Beach) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூரில் அமைதிந்துள்ள ஒரு கடற்கரையாகும். அரபிக் கடல் கரையோரத்தில் இக்கடற்கரை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை ஈர்க்கின்ற வகையில் அமைந்துள்ளது. அகன்ற பொன்நிற மணலுடன் உள்ள அந்தக் கடற்கரையில் நிழல் குடைகள், நொறுக்குத்தீனிக்கான சிறுகடைகள் உள்ளன. இது தவிர சிறப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பு, கடற்கரை கைப்பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான வசதிகள் கொண்டதாக உள்ளது. மேலும் இங்குள்ள உப்பங்கழிகள், நாட்டு படகு சவாரிகள், யானை சவாரி, பார்வையாளர்களுக்கான கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற பல பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டுள்ளதாக உள்ளது.

நீண்டகால மரபுகளுடன், எளிமையான மக்களைக் கொண்ட ஒரு சாதாரண மீனவர் கிராமமாக இருந்தது இது. மலையாளத்தின் உன்னதமான திரைப்படமான செம்மீன் இப்பகுதியில் படமாக்கப்பட்ட பின்னர் இந்த அழகிய கடற்கரையைப் பற்றி திரைப்பட ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் அரிந்துகொண்டு பிரபலமான ஒன்றாக ஆனது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டிகா_கடற்கரை&oldid=3025135" இலிருந்து மீள்விக்கப்பட்டது