நாடி ஆக்சிஜன் அளப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடி ஆக்சிஜன் அளவைமானி

தமனி இரத்த ஆக்சிஸஜன் நிரம்பலை அளக்க உதவும் கருவியான (Pulse oximetry) இது அறுவை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, சுவாச சிகிச்சை பிரிவு போன்றவற்றில் அவசியமாக இருக்க வேண்டிய ஒரு கருவி ஆகும்.

செயல்படும் விதம்[தொகு]

இக் கருவியை கை விரல் நுனியிலோ காது மடல்களிலே பொருத்த வேண்டும். இது சிவப்பு ஒளிக்கதிர்களையும் அகச்சிவப்புக் கதிர்களையும் வெளியிடும். இக்கதிர்கள் ஆக்ஸி உறீமொகுளோபினையும் டி-ஆக்சி உறீமோ குளோபினையும் வேறுபடுத்தி அளவிடுகின்றன.

நிறைகள்[தொகு]

இதன் சிறப்பம்சம் உடலைத் துளையிடாமை (non-invasive) மற்றும் விரைவாகச் செயல்படுதல் ஆகும்.

குறைபாடு[தொகு]

இந்த அலைநீளங்களால் கார்பாக்சி உறீமோ குளோபின் (CO-Hb), மெட்-உறீமோ குளோபின் (met-Hb) போன்ற உறீமோகுளோபின் பிறழ்வுகளைக் கண்டறிய முடியாது. எனவே இந்நிலைகளினால் நீலம் பாரித்த (Cyanosed) நோயாளிகளிலும் உயிர்வளி நிரம்பல் (oxygen saturation) நூறு விழுக்காடு எனத் தவறாகக் காட்டும். ஆகவே இந்நிலைகளில் இரத்த வாயு பகுப்பாய்வே (Blood Gas Analysis) சரியான முடிவைக் காட்டும்.

அது மட்டுமின்றி குளிர் காரணமாகவோ மருந்துகள் காரணமாகவோ நோயரின் விரல் இரத்தக் குழாய்கள் சுருங்கியிருப்பின் (Vasoconstriction) ஆக்சிஸன் நிரம்பல் சரியான அளவு இருப்பினும் இது குறைவாகக் காட்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடி_ஆக்சிஜன்_அளப்பான்&oldid=1513502" இலிருந்து மீள்விக்கப்பட்டது